கட்டான கரண்ட்.. கன்பியூஸ் ஆன மாப்பிளை.. கல்யாண வீட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்.. என்னன்னு தெரியுமா..?

   கல்யாண வீடு ஒன்றில் கரண்ட் கட்டானதால் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளது. அப்படி என்னதான் நடந்தது எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

                      திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.  திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என  வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. 

  பொதுவாக வெளிச்சம் தான் கல்யாண வீட்டிற்கே அழகு. அதனால் தான் பலவண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கின்றனர். இங்கேயும் அப்படித்தான். கரண்ட் கட்டினால் கல்யாண வீட்டில் பல களேபரங்கள் நிகழ்ந்துவிட்டது. அப்படி என்ன நடந்தது எனக் கேட்கிறீர்களா? மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜைனி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் லாக் இவருக்கு கரிஷ்மா, கோமல், நிகிதா என மூன்றுமகள்கள் உள்ளனர். 

  இந்த மூன்று மகள்களுக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்துவைக்க முடிவுசெய்தார் தந்தை. இதில், ராம், கணேஷ், தங்க்வாரா ஆகியோர் மாப்பிள்ளைகளாக முடிவு செய்யப்பட்டது. இவர்கள் தனித்தனியே வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்களுக்கு ஒரேமேடையில் கல்யாணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. இவர்கள் அவர்களது கலாச்சாரப்படி, தலையில் முக்காடு போட்டு மூடியிருந்தனர். மாப்பிள்ளைகளும் தாலியும் கட்டிவிட்டனர்.

கலாச்சாரப்படி, முக்காடை எடுக்காமலேயே வீட்டுக்கும் அழைத்துச் சென்றுவிட்டனர். வீட்டிற்குப் போய் பார்த்தபோதுதான் கரண்ட் கட்டினாலும், மண்டபத்திற்குள் போதிய வெளிச்சம் இல்லாததால் மணப்பெண்கள் இருட்டில் மாறி, மாறி அம்ர்ந்திருப்பது வீட்டிற்கு போனபின்புதான் தெரிந்தது. உடனே இதைப்பற்றி மாமனாருக்கு தகவல் சொன்னார்கள். அவர் உடனே புரோகிதரை மீண்டும் அழைத்து, இன்னொருமுறை சரியான மாப்பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்துவைத்தார்.