கடக ராசிக்காரர்களுக்கு 2024 எப்படி இருக்கும் தெரியுமா? – கண்ணிப்பு இதோ..!

கணிப்பு: ஜோதிஷ ரத்னா இரா.ஜோதி சண்முகம்

கடக ராசி நபர்களுக்கு வருடத்தின் முற்பாதியில்  வேலை, தொழில், வியாபாரத்தில் இழப்புகள், முடக்கமான நிலைமை, விரும்பத்தகாத இடமாற்றம் போன்ற பலன்கள் நிகழும்.வெளியூர் பயணங்கள் காரணமாக தண்ணீர் மற்றும் உணவு ஒவ்வாமை, உடல் எடை அதிகரித்தல், சிறு நீரக பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் உடல் நலத்தை பாதுகாக்கலாம்.திருமண முயற்சிகள் தடைபடும்.  

குடும்பத்திற்குள் வெளி நபர்களின் தலையீடுகளை தவிர்ப்பதன் மூலமாக கணவன் மனைவிக்குள் சந்தேகம், குழப்பம் வராமல் பாதுகாக்கலாம்.இளைய உடன்பிறப்புகளுடன் விட்டுக்கொடுத்து செல்வதால் கருத்து வேறுபாடுகள் பிரிவினைகளை தவிர்க்கலாம். ஜூன் மாதம் முதல் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றமும் தொழிலில் லாபமும் சேரும்.மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பாக வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு, இளைஞர்களுக்கு காதல் வசப்படுதல், திருமண வாய்ப்புகள் கைகூடுதல், பெண்களுக்கு புதிய நகை வாங்கும் யோகம், போன்ற நற்பலன்கள் நிகழும்.

இந்த வருடம் இவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் – திருச்செந்தூர் முருகன், தானமாக கொடுக்க வேண்டிய பொருள் – தோல் செருப்பு