ரிஷப ராசியினரா நீங்கள்? 2024 உங்கள் வாழ்கை எப்படி இருக்கும் தெரியுமா? 

  கணிப்பு: ஜோதிஷ ரத்னா இரா.ஜோதி சண்முகம்

            ரிஷப ராசி நபர்களுக்கு வருடத்தின் முற்பாதியில் பொருளாதார செலவுகள் அதிகமாக இருக்கும், பங்கு சந்தை முதலீடுகளில் விழிப்புடன் செயல்பட வேண்டும். தங்க நகை தொடர்பான திட்டங்களில் முதலீடு செய்து கையிருப்பு பணத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்.

குடும்பத்தில் வயதில் மூத்தவர்கள் மற்றும் பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வதன் மூலமாகவும், எதையும் அவர்களுடன் கலந்தாலோசித்த பின்பு செயல்படுத்துவதும் இவர்களுக்கு இந்த வருடத்தில் வெற்றிகளை பெற்றுத்தரும்

.ஜூன் மாதம் முதல் புனிதமான இடங்களுக்கு பயணம் செய்தல், ஆன்மீக வாழ்வில் நாட்டம், நல்ல மனிதர்களின் நட்புறவு கிடைத்தல், திருமண முயற்சிகள் வெற்றி அடைதல், குழந்தை பாக்கியம் கிடைத்தல், தந்தை வழியில் உதவிகள் கிடைத்தல், மாணவர்களுக்கு உயர்கல்வியில் மேன்மை, வேற்று மத, இன, மொழி நபர்களின் சந்திப்பும் நட்புறவும் கிடைத்தல் மற்றும் வெளி நாட்டுத்தொடர்பான  வேலை, தொழில் அமைதல், இது போன்ற  நற்பலன்கள் இவர்களுக்கு நிகழும். 

இந்த வருடம் இவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் – விநாயகர் அல்லது ஆஞ்சனேயர், தானமாக கொடுக்க வேண்டிய பொருள்  – தர்ப்பை பாய்