மிதுன ராசியினர் 2024 ல் இதை தானமாக கொடுத்தால் உயரலாம்..

கணிப்பு: ஜோதிஷ ரத்னா இரா.ஜோதி சண்முகம்

மிதுன ராசி நபர்களுக்கு வருடத்தின் முற்பாதியில் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் நிறைவேறும். மூத்த உடன் பிறப்புகளின் அன்பும், ஆதரவும் மகிழ்ச்சியை தரும். திருமண முயற்சிகள் வெற்றியடையும். இல்லற வாழ்வில் ஒற்றுமை, மகிழ்ச்சி பெருகும். பண வரவும், சேமிப்பும் சிறப்பாக இருக்கும்.

புதிய நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும். வங்கி மூலமாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் விருப்பமும், தெளிவும், முன்னேற்றமும் ஏற்படும். 

ஜூன் மாதம் முதல் தேவையற்ற அலைச்சல்கள்,இடமாற்றங்கள்,மருத்துவச்செலவுகள் அதிகமாகும்,வேலை, தொழில் காரணமாக வெளிமாநில,வெளி நாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். பணம், நகை கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக செயல்படுவதன் மூலம் எதிர்பாராத இழப்புகளைத் தவிர்க்கலாம். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

இந்த வருடம் இவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் – காலபைரவர், தானமாக கொடுக்க வேண்டிய பொருள் – எள்ளுருண்டை.