2024ல் மேஷ ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம் எது தெரியுமா?

கணிப்பு: ஜோதிஷ ரத்னா இரா.ஜோதி சண்முகம்

                    மேஷ ராசி நபர்களுக்கு வருடத்தின் முற்பாதியில் அலைச்சல்கள், மருத்துவ செலவுகள், இடமாற்றம், தீர்த்த யாத்திரைகள் இது போன்ற பலன்களை அனுபவிக்கும் வாய்ப்பு இருக்கும். எனவே இவர்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவதுடன் எதையும் சிந்தித்து, திட்டமிட்டு செயல்படுவதன் மூலமாக இந்த வருடத்தில் துன்பங்கள், இழப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

ஜூன் மாதம் முதல் இவர்களுக்கு வாழ்வில் செல்வாக்கு, பொருளாதார வளர்ச்சி, குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை அதிகரித்தல், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள்  நடைபெறுதல், நோய் , கடன், வழக்குகளிலிருந்து விடுதலை கிடைத்தல், நல்ல வேலை வாய்ப்பு கிடைத்தல், பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், சொந்த தொழில் மற்றும் கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைத்தல் இது போன்ற நற்பலன்களை அனுபவிக்கும் யோகம் கிடைக்கும். 

இந்த வருடம் இவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் – துர்க்கை அம்மன் தானமாக கொடுக்க வேண்டிய பொருள்  – உளுந்து