நடுவானில் கல்யாணம்.. துபாயை திரும்பிப் பார்க்க வைத்த இந்தியர்!

திருமணம் வாழ்வில் ஒருமுறை மட்டுமே நிகழும் ஆச்சர்யமான வைபோகம். அதனால் தான் அதனை தங்களின் ரசனைக்கு ஏற்றவாறு செய்துகொள்ள பலரும் விரும்புவார்கள். இங்கேயும் அப்படித்தான். இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவரின் மகளின் திருமணம் துபாய் வாசிகளை ஆச்சரயத்தில் ஆழ்த்தி உள்ளது.

அப்படி என்ன நடந்தது இந்தக் கல்யாணத்தில்? அதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ஐயக்கிய நாடுகள் அமீரகத்தில் உள்ள துபாயில் பெரிய தொழிலதிபராக இருப்பவர் தீலிப் பாப்லி. இவரது செல்ல மகள் தான் விதி பாப்லி. இவருக்கு திருமணம் நடந்தது. வழக்கமாக திருமணம் என்றால் கல்யாண மண்டபத்தைத் தானே புக் செய்வார்கள் ஆனால் திலிப் தன் செல்ல மகளுக்காக நடுவானில் கல்யாணம் செய்து வைத்து உள்ளார்.


அதாவது விதி பாப்லிக்கும், அவருக்கு நிச்சயிக்கப்பட்ட ஹரிதேஷ் சைனானிக்கும் நடுவானில் வைத்து, உறவுகள் படை சூழ போயிங் 747 என்னும் விமானத்தில் வைத்து நடந்தது. இதற்காக இந்த விமானம் மொத்தமாக வாடகைக்கு எடுக்கப்பட்டது. இதில் 300க்கும் அதிகமான சொந்த, பந்தங்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். ஜெடாக்ஸ் தனியார் முனையத்தில் வைத்து ஜாம்..ஜாமென இந்தக் கல்யாணம் நடந்தது.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட திலீப் பாப்லி துபாயில் முக்கிய தொழிலதிபராக உள்ளார். இவர் 28 வருடங்களுக்கு முன்பு தனது கல்யாணத்தையும் கூட ஏர் இந்தியா விமானத்தில் வைத்துத்தான் செய்தார். துபாய் மட்டுமல்லாது, இந்தியாவிலும் போப்லி அண்ட் சன்ஸ் ஜிவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகின்றது போப்லி குடும்பம்!

கல்யாணத்திற்காகவே இந்த தனி விமானம் துபாயில் இருந்து, ஓமன் வரை ஒரு ட்ரிப் அடித்தது. அந்த மூன்று மணிநேரக் கேப்பில் கல்யாணம் அதன் பின்னான விருந்து, உசபரிப்புகளும் நடந்தது. வாரே வாவ்! என இதை அனைவரும் ஆச்சர்யமாகப் பகிர்ந்து வருகின்றனர்.