நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் மகனா இது..? இவரும் பிரபல நடிகர் ஆச்சே…!

                தமிழ்த்திரையுலகுக்கு வாரிசு நடிகர்கள் புதிது அல்ல. சிவாஜி கணேசன், முத்துராமன் குடும்பமெல்லாம் மூன்றாம் தலைமுறையாக நடிப்புலகில் இருக்கிறார்கள். சரத்குமார், கமலஹாசனின் வாரிசுகளும் நடித்துவருகின்றனர். அந்தவகையில் பிரபல நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் மகனும் நடித்து வருகிறார். அவரை நாம் பலபடங்களில் பார்த்திருந்தாலும் அவர்தான் மேஜர் சுந்தர்ராஜனின் மகன் என நமக்குத் தெரியாது.

   ஆம்..இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். மேஜர் சந்திரகாந்த் என்ற மேடைநாடகத்திலும், அதேபெயரில் வெளியான படத்திலும்  சுந்தர்ராஜன் நடித்ததால் மேஜர் சுந்தர்ராஜன் என்றே அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே நடித்துவரும் மேஜர் சுந்தர்ராஜன் தமிழ், ஆங்கிலம் என இருமொழியிலும் ஒரேவசனத்தைப் பேசி புகழ்பெற்றவர். 1965 முதல் 2003 வரை திரைத்துறையில் தீவிரமாக இயங்கிய இவர் பாசிட்டிவ், நெகட்டிவ் கேரக்டர்களில் அசத்தியவர்.

  இவரது மகன் கெளதம் சுந்தர்ராஜனும் நடிப்புலகில் அசத்துபவர். ஆம்பள, நாளைய தீர்ப்பு, இருவர், செக்கச்சிவந்த வானம் உள்பட பலபடங்களில் நடித்திருக்கிறார் இவர். அடிப்படையில் நடன இயக்குனரான இவர், கண்ணுல காசை காட்டப்பா..என்ற படத்தையும் இயக்கி இருக்கிறார். வடிவேலுவை பெண் என நினைத்து கெளதம் சுந்தர்ராஜன் தாலிகட்டும் நகைச்சுவை பட்டி,தொட்டியெங்கும் ஹிட் அடித்த ஒன்று. அந்த கெளதம், சுந்தர்ராஜனின் மகனா என பலரும் ஆச்சர்யத்தோடு பகிர்ந்து வருகின்றனர். இதோ நீங்களே அவரது படத்தைப் பாருங்களேன். 

pic 1

pic 2