தல அஜித்தின் ரீல் மகள் அனிகாவின் பெர்த் டே கொண்டாட்டம்.. இப்போ எப்படி தேவதை மாதிரி இருக்காங்க பாருங்க…

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக உருவாகி பின்னாளில் பெரிய ஹீரோயினாக ஜெயித்தவர்கள் பலர் உண்டு. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி அங்கிள் என அழைத்து ரஜினியோடு குழந்தையாக நடித்த மீனா பின்னாளில் அதே ரஜினிக்கு ஜோடியானார்!

தல அஜித்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகாவும் இப்போது ஹீரோயின் ரேஸில் களத்தில் இருக்கிறார். அஜித், நயன் தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர் அனிகா, அம்மணிக்கு இப்போது 18 வயது ஆகிவிட்டது அஜித்துடன் விஸ்வாசத்திற்கும் முன்பே, கடந்த 2015 ஆம் ஆண்டில் என்னை அறிந்தால் படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்தார். அந்தப் படமும் ஹிட் அடித்தது.

அதில் இடம்பெற்ற “உனக்கென்ன வேண்டும் சொல்லு..உலகத்தைக் காட்டச் சொல்லு” பாடலும் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அனிகாவுக்கு ஹீரோயின் ஆசை எட்டிப் பார்த்துவிட்டதால் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது தன் கவர்ச்சியான போட்டோக்களையும் வெளியிட்டு வருகின்றார், இருந்தும், தல அஜித்தின் ரீல் மகள் கவர்ச்சி போஸ் கொடுக்கலாமா? என்றெல்லாம் நெட்டிசன்கள் அவ்வப்போது கலாய்ப்பதும் நடக்கின்றது. இந்நிலையில் அண்மையில் அவர் தன் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடினார், அது தொடர்பான படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றது.

pic1

pic2

pic3