லேசா லேசா படத்தில் நடித்த காமெடி நடிகரா இது? அவரின் இப்போதைய நிலமை தெரியுமா..?

  தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கூட தாக்குப் பிடித்து நிற்கிறார்கள். ஆனால் ஹீரோயின்களின் காலம் அப்படி அல்ல. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல் சில ஆண்டுகள் மட்டுமே ஹீரோயின்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.

  இப்போதுதான் அதில் இருந்து மாறுபட்டு நயன் தாரா, த்ரிஷா போன்றோர் நீண்டகாலம் சினிமாவில் தாக்குப்பிடித்து வருகின்றனர். த்ரிஷா கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான பிரசாத், சிம்ரன் நடித்து மெகா ஹிட்டான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்திருந்தார். அப்படி தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன த்ரிஷா, ஷ்யாம் நடித்த லேசா லேசா படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார். சாமி, கில்லி என இவர் நடித்த படங்கள் பல மெகா ஹிட் ஆகின. நடிகர் ஸ்யாம் வாழ்விலும் மறக்கமுடியாத ஹிட் படமாக லேசா லேசா இருந்தது.

  அந்தப்படத்தில் இடம்பெற்ற லேசா…லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா பாடல் இப்போதும் செம ஹிட். அந்தப்படத்தில் நகைச்சுவை ரோல் செய்தவர் தான் சீனிவாசன். இவர் மலையாளத்தில் ரொம்ப பேமஸ். காமெடி, குணச்சித்திர நடிப்புகளில் வெளுத்துக் கட்டுவார். இவரது மகன் வினித் ஸ்ரீனிவாசனும் இப்போது இயக்குனராக உள்ளார். 

  சீனிவாசன் கடந்த ஜனவரி மாதத்தில் ஒருநாள் மூச்சுத்திணறல் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்ந்தார். நீண்டநாள் சிகிச்சைகுப் பின்பே சரியானார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொச்சின் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு வர ஆயுத்தமான போது, திடீரென மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது. மலையாளப்படங்கள் பலவற்றில் நடிக்க அவர் டேட் கொடுத்திருக்கும் நிலையில் அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சையில் சிக்குவதால் சீனிவாசன் ரொம்பவே தவித்து வருகின்றார்.