அடடே நம்ம கே.ஜி.எப் ஹீரோவா இது? க்ளீன் சேவில் தாடி இல்லாமல் எப்படி இருக்காருன்னு பாருங்க…

   பாகுபலி படத்துக்குப்பின் தென்னிந்தியா முழுவதும் அதிகமான ரசிகர்களால் கொண்டாடப்பட்டத் திரைப்படம் கே.ஜி.எப். தமிழிலும் வெளியாகி பரவலான விமர்சனத்தையும், வசூலையும் குவித்துவருகிறது. 

  கன்னடத்தில் பொதுவாக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரப்படங்கள் மிக அரிது. அதனாலேயே கன்னடத்தில் இப்படியும் ஒரு படமா? என கே.ஜி.எப் திரைப்படத்தை ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள் ரசிகர்கள்.இப்படத்தின் பாகம் இரண்டிற்கான சூட்டிங் விறு,விறுப்பாக நடந்துவந்த நிலையில் கொரோனாவால் பார்ட் 2  ரிலீஸ்  தள்ளிப்போனது.  அண்மையில் பீஸ்ட் உடன் வெளியாகி வசூலிலும் மிரட்டி வருகின்றது கே.ஜி.எப் 2.  யஷ் நடித்த இந்தப்படம் வேற லெவலில் ஹிட் ஆனது.

    கடந்த 2018 ஆம் ஆண்டு, பிரசாந்த் நில் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் முதல் பாகம் திரைப்படம் ஆஸ்கர் விருதும் பெற்றது. இதனாலேயே இரண்டாம் பாகத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அதையும் படம் பூர்த்தி செய்துள்ளது. இப்படியான சூழலில் கேஜிஎப் நாயகன் யஸ் நீண்ட காலத்திற்குப் பின்னர் தன்னுடைய அடர்த்தியான தாடியை சேவ் செய்து செம ஸ்மார்ட் பாயாக மாறியுள்ளார். அவரது இந்த போஸ் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.