காமெடி நடிகர் யோகிபாபு பையா படத்தில் நடித்துள்ளாரா? அதுவும் இப்படி ஒரு கேரக்டரா? இதுவரை கவனிச்சது இல்லையே…!

     செந்தில்_கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், புரோட்டா சூரி என தமிழ்த்திரையுலகில் காமெடியில் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருவர் கோலோச்சுவர். அந்த வகையில் இது யோகி பாபுவின் காலம்!

      யாமிருக்க பயமேன் படத்தில் பன்னி மூஞ்சி வாயன் என்னும் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அதன் பின்னர் வெளியாகும் படங்களில் எல்லாம் திரையரங்கில் அவர் முகம் தெரிந்தாலே, ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு போய்விடுகின்றனர்.

     இதனாலேயே இவருக்கு பட வாய்ப்புகளும் குவிகின்றன. அண்மையில் அஜித் நடிப்பில் சக்கைப்போடு போட்ட விஸ்வாசத்திலும் யோகி பாபு நடித்திருந்தார். கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் அவரது நடிப்பில் 20 படங்கள் வந்தன. ஒருபக்கம் பக்காவான நகைச்சுவை ரோலில் நடிக்கும் யோகிபாபு, மற்றொருபுறம் பரியேறும் பெருமாள் போன்ற கலை, சமூக அக்கறை தாங்கிய படத்திலும் நாயகனுடன் படம் முழுவதும் ஜார்னி செய்திருப்பார். இப்போது ஹீரோவாகவும் உயர்ந்திருக்கும் யோகிபாபுவுக்கு தொடர்ச்சியாக படங்களும் வரிசை கட்டுகிறது.

   விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் தான் நடிப்புலகில் கவனத்துக்கு உள்ளானார் யோகிபாபு. லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்து சக்கைப்போடு போட்ட ‘பையா’ படத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார். ஆனால் அதில் யோகி பாபு வருகிறார் என்பதை மற்றவர்கள் கவனிக்கக் கூட இல்லை அதில் சண்டைக்காட்சியில் அடியாள்களில் ஒருவராக வந்திருப்பார் யோகிபாபு. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே ஒரு காமெடியனையும் லிங்குசாமி அடியாள் ஆக்கிட்டாரேப்பா என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. 

pic 1

pi2