கண் எதிரே வந்த பசு மாடு… மனிதாபிமானத்துடன் இந்த ட்ரெயின் டிரைவர் செஞ்ச செயலை பாருங்க..!

உலகில் பிறந்த உயிர்கள் அனைத்திற்கும் இந்த உலகம் சொந்தம். மனிதர்களுக்கு மட்டுமே எல்லை கோடுகள் உள்ளது. மற்ற உயிரினங்களுக்கு இது பொருந்தாது, ஏனனில் உலகமே அவர்களது வீடு, வேடந்தாங்கலுக்கு வெளிநாட்டில் உள்ள பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக குறிப்பிட்ட காலங்களில் வந்து தங்கி செல்லும். அது போல் மற்ற உயிரினங்களும் தண்ணீர் மற்றும் உணவு தேடி மற்ற இடங்களுக்கு இடம் பெயரும். அவற்றிற்கு இங்கே தான் செல்ல வேண்டும் இங்கே செல்ல கூடாது என்று எந்த வித தயக்கங்கள் கிடையாது. தேவைகளுக்கேற்ப வாழிடத்தை மாற்றிக் கொள்ளும்.

மனிதர்கள் தங்கள் தேவைக்காகவும், நாகரிக வளர்ச்சியினாலும் காடுகளை சுருக்கி அவர்களின் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம். கால்நடைகள் உணவு தேடி பல மையில்களுக்கு நடந்து செல்லும், கூட்டமாக நகரும் யானைகள் குழு தங்கள் குட்டிகளின் பாதுகாப்பிற்காக அவற்றுடன் இணைந்தே செல்லும். அந்த காட்சிகள் உலகம் முழுக்க செய்தியாக வெளிவந்தது. இவ்வாறு கால்நடைகள் செல்லும் பாதையில் அல்லது அவர்களின் உலகத்திற்குள் மனிதர்கள் சாலைகள் மற்றும் ரெயில் பாதைகள் போன்றவற்றை அமைத்து வருகிறோம். இது மனிதர்களுக்கு சாதகமான ஒன்றாக இருந்தாலும், விலங்குகளின் வாழ்க்கை அமைப்பில் மாறுதலையும் …..அச்சுறுத்தலையும்…. கொண்டு வரும்.

இங்கே காணொலியில் ரெயிலை இயக்கி வந்த ஓட்டுனர் தண்டவாளத்தில் கூட்டமாக மாடுகள் தண்டவாளத்தை கடப்பதை பார்த்து அந்த விலங்குகளுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து விட கூடாது என்பதற்காக உடனடியாக ரெயிலை நிறுத்தி விடுகிறார். அந்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ரெயில்வே ஓட்டுனரின் மனிதநேயமிக்க செயலை சமூகவலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்……அந்த காணொலியை இங்கே காணலாம்…..