90ஸ் பிரபல நடிகை ரீமாசென்னா இது..? தற்போது எப்படி மாறிட்டாங்க பாருங்க..!

தமிழ்த்திரையுலகில் தன் தேர்ந்த நடிப்பினால் முத்திரை பதித்தவர் நடிகை ரீமாசென். ஒருகாலத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அறிமுகமான மின்னலே படத்தில் இடம்பெற்ற ‘வசீகரா’ பாடலே பயங்கர ஹிட் அடித்தது.

விஜய், விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார் ரீமாசென். ரீமாவும், விஷாலும் சேர்ந்து நடித்த செல்லமே திரைப்படம் விஷாலுக்கும் திருப்புமுனை படமாக அமைந்தது. ‘மே மாதம் 98ல் மேஜர் ஆனானே..’பாடலும் இவர் ஆடி ஹிட் அடித்தது. சிம்பு நடித்த ‘வல்லவன்’ படத்தில்; நெகட்டிவ் ரோலிலும் பட்டையைக் கிளப்பியிருந்தார் ரீமாசென்.

தமிழ் மட்டுமல்லாது பலமொழிகளிலும் நடித்திருக்கும் ரீமாசென் கடந்த 2012ல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத்தம்பதிக்கு இப்போது ‘ருத்ரவீர்’ என்ற மகனும் உள்ளார். இப்போது நடிகை ரீமாசென்னின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

pic1

pic2

pic3