இவரு ஒரிஜினல் ஸ்பைடர் மேனுக்கே டப் கொடுப்பாரு போல… என்ன ஒரு வேகம் பாருங்க…

காலங்கள் மாற மாற மக்களின் ரசனைகளும், மக்களின் உணவு பழக்கவழக்கங்களும் மாறி கொண்டே செல்கிறது. தமிழர்கள் நம் மண்ணில் விளைந்த பொருட்களை சமைத்து உணவாக உட்கொண்டனர். அதனால் ஆரோக்கிய குறைபாடு இன்றி வயதான காலத்திலும் மரம் ஏறுவது, உழவு செய்வது, அறுவடை செய்வது என்று சுறு சுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் மன உளைச்சல் இன்றி வாழ்ந்து வந்தார்கள். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் அப்போது கிடையாது. கிடைத்த உணவு பொருட்களை இயற்கையான முறையில் சேகரித்து அதனை பக்குவப்படுத்தி சமைத்து உண்டனர்.

தற்போது நோய் இல்லாத மனிதர் வாழும் இல்லங்கள் இல்லை. சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை ஏதோ ஒரு நோயினால் வருந்தி கொண்டிருக்கிறார்கள். அறிவியல் முன்னேற்றம் பெருகியிருந்தாலும் அதற்கான பின் விளைவுகளையும் அன்றாடம் அனுபவித்து கொண்டிருக்கிறோம். சமீபத்தில் கான்பூரில் அதிக குளிர் காரணமாக இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் ஏற்படும் விளைவுகள் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

சீனி என்னும் வெள்ளை சர்க்கரை மனிதர்களை மெதுவாக கொல்லும் ஒரு உணவு பொருள். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் தலைநகரமாக இந்தியா இருக்கிறது. ஒரு காலத்தில் பணக்கார நோய்கள் என்று வரையறைக்குள் இருந்த குறிப்பிட்ட நோய்கள் இன்று அனைவரது வீடுகளிலும் சர்க்கரை நோயாளிகள் இல்லாத தெருக்களும் வீடுகளும் இல்லை. நோயில் சிக்கி அதனால் ஏற்படும் பின் விளைவுகளை அனுபவித்து இறுதியில் அந்த நோய்க்கே பலியாகி விடுகின்றனர்.

தென் தமிழகத்தில் பனை ஏறும் தொழில் பிரபலமாக இருந்தது. அவ்வற்றில் இருந்து கிடைத்த கருப்பட்டி கொண்டு இனிப்பு பண்டங்களை செய்து உண்டனர். மேலும் கரும்பின் மூலம் செய்யப்பட்ட சர்க்கரை கொண்டு உணவு பொருட்கள் செய்தனர். அதிகாலையில் கண் விழித்து நாள் முழுக்க உழைத்து சத்தான உணவை உண்டு வாழ்ந்தனர் தமிழர்கள். பனை அல்லது தென்னை மரம் ஏறும் போது காலில் நாறினால் செய்யபட்ட ஒரு வளையத்தை மாட்டி கொண்டு மரம் ஏறி தென்னை பொருட்களை அறுவடை செய்தனர். இந்த காணொலியில் ஒரு மனிதர் எந்த பாதுகாப்பு உபகரணமும் இன்றி வெகு சாதரணமாக மரம் ஏறி தேங்காய் பறித்த நிகழ்வு ஸ்பைடர் மேன் போல் தாவி சென்று தேங்காய் பறித்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது…..அந்த காணொலி காட்சிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.