கொஞ்சம் மிஸ் ஆனாலும் அவ்வளவுதான்… ட்ரெயின் படிக்கட்டில் ரீல்ஸ் எடுத்த பெண்ணுக்கு நேர்ந்ததை பாருங்க..!

இன்றைய காலகட்டங்களில் பலருக்கும் சோசியல் மீடியாக்கள் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது.சோசியல் மீடியாக்களில் தங்களின் திறமையை காட்டி பலரும் பலவிதமான முறையில் வீடியோக்கள் எடுத்து அவர்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி அனைவரின் கவனத்தையும் பெற நினைக்கின்றனர்.

அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சி சற்று வித்தியாசமாகவே இருக்கும் சில நேரங்களில் அந்த முயற்சி அவர்களுக்கு பலன் அளிக்காமல் கூட போகலாம். சிலர் சோசியல் மீடியாக்களில் அனைவரையும் கவனத்தையும் பெற உயிரை கூட பொருட்படுத்தாது முட்டாள்தனமாக பலவித முறையில் வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை எடுக்கின்றனர்.

அந்த வகையில் இங்கும் ஒரு பெண் ஓடும் புகைவண்டியின் படிக்கட்டில் நின்று ரீல்ஸ் எடுக்கின்றார். தனது ரிலீஸ் அழகாக வரவேண்டும் என எதையும் பொருட்படுத்தாது தன் முழு உடம்பையும் ட்ரெயின் படிக்கட்டின் வெளியே தொங்கவிட்டு ஒரு கையை நீட்டி நண்பர் உதவியுடன் ரீல்ஸ் எடுக்கின்றார்.அப்பொழுது திடீரென ஒரு கம்பம் வரவே சட்டென தன் முழு உடம்பையும் உள்ளே எடுத்துக் கொண்டார். சில நொடிகளில் நிகழ்ந்த அந்த நிகழ்வில் அவர் உயிர் தப்பியது என்றே சொல்லலாம். இது வீடியோவாக வெளியாகி இணையவாசிகளால் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன நீங்களே பாருங்க அந்த பெண்ணின் முட்டாள் முயற்சியை..