நிச்சயம் இது இறைவனின் ஆசீர்வாதம் தான்… வீடியோ பாருங்க ஷாக் ஆகிடுவீங்க… இவர்களுக்கென கிடைத்த பாக்கியம் இது..!

  நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருப்பதே இந்த உலகில் மிகப்பெரிய சம்பாத்யம். மற்ற எந்த வருமானத்தையும் விட அதுவே ஒருவருக்கு மிகப்பெரிய செல்வம் ஆகும். அதிலும் தங்கள் குடும்பத்தில் இறப்பே இல்லாமல் நான்கைந்து தலைமுறைகளாக இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

  இன்றைய தலைமுறையினர் பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனால் இளபயதிலேயே மாரடைப்பு உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கும் தொடர் உயிர் இழப்பை சந்தித்து வருகிறோம். இப்படியான சூழலில் தான் இந்தக் குடும்பம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான ஆனந்த் மகேந்திரா தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ  வெளியிட்டுள்ளார்.

  அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ வெறும் 20 நொடிகள் தான். ஆனால் அது சொல்லும் வாழ்வியல் கதை ரொம்பப் பெரியது. குறித்த அந்த வீடியோவில் முதலில் ஒரு பொடியன் நின்று கொண்டு அப்பா என்கிறான். அவனது அப்பா வருகிறார். தொடர்ந்து தாத்தா, அதன்பின் பாட்டன், பூட்டன் என ஐந்து தலைமுறை ஆண்கள் வரிசையாக நிற்கிறார்கள். நிச்சயமாக இது ஆச்சர்யம் அளிக்கும் விசயம் தான். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். இதைக் கடவுளின் ஆசீரவாதம் என்றே சொல்வீர்கள்.