யானை அருகில் ராதை மனதில் பாட்டிற்கு கலைநயத்தோடு பரதநாட்டிம் ஆடிய பெண்… பதிலுக்கு ஆசீவாதம் வழங்கி இந்த யானை செஞ்சதை பாருங்க..!

பரத நாட்டிய கலைஞர்கள் மேடையில் அரேங்கேற்றம் செய்வார்கள். பாடலுக்கு தகுந்தவாறு அபிநயம் பிடித்து பாடலின் வரிகளுக்கேற்ப உணர்ச்சியை முகத்தில் காட்டி நடனத்தில் அதற்கேற்ப அசைவுகளை கொண்டு வருவார்கள். போட்டிகள் என்றால் போட்டிக்கு தகுந்தவாறு நெருப்பு போன்று ஆடுவார்கள். மனதை உருக்கும் பாடல்களுக்கு மென்மையான அசைவுகளால் நடனம் ஆடுவார்கள். கோபம் கொள்ளும் ருத்திர தாண்டவத்திற்கு கோப முகத்துடன் அபிநயங்கள் பிடித்து பார்வையாளர்களை வியக்க வைப்பார்கள்.

நாட்டிய பேரொளி பத்மினி, நடிகை வைஜெயந்தி மாலா, நடிகை சோபனா போன்ற பிரபலங்கள் பரதநாட்டியத்திற்கு பெயர் போனவர்கள் . ஆனால் பரத நாட்டிய கலையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் ருக்மணி தேவி. இவர் 1904-ம் வருடம் மதுரையில் பிறந்தார். அந்த காலத்தில் சமூகத்தால் அங்கீகரிக்க படாத கலையாக இருந்த பரத நாட்டியத்தை ருக்மணி தேவி அவர்கள் பரத நாட்டிய பாணியை மாற்றியமைத்து அதன் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்.1920-ல் பரதநாட்டிய கலையை மக்கள் எதிர்த்த போதிலும் மேடையில் அரங்கேற்றினார். பரதநாட்டிய கலை வளர்வதற்கு காரணமான இருந்த அவருக்கு மத்திய அரசால் 1956-ல் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. 1967-ல் சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப் வழங்கப்பட்டது.2016-ல் கூகிள் அவரது 112 வது பிறந்த நாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

இங்கு ஒரு பரதநாட்டிய கலைஞர் ஒருவர் களிறு முன்பு ராதை மனதில் பாட்டிற்கு பெண் ஒருவர் பரதநாட்டியம் ஆட ஆடிய அபிநயத்தை பார்த்து தாளத்திற்கு ஏற்ப யானை தலையை ஆட்டி கால்களால் நடனம் ஆடிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அந்த காணொலி காட்சியை இங்கே காணலாம்……