நாகினிக்கே சவால் விடும் முதியவர்கள்… பாம்பு நடனம் ஆடி சுற்றிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்திய பாம்பாட்டிகள் ..!

பழைய சினிமாக்களில் பாம்பு வருவதை முன்கூட்டியே இசையின் மூலமும் ஸ்ஸ்ஸ்ஸ்…….என்ற ஓசை மூலமும் உணர வைப்பார்கள். அந்த இசையை கேட்கும் போதே திகிலாக இருக்கும். கதாநாயகனையோ அல்லது கதாநாயகியையோ பாம்பு தீண்ட முற்படும் போது திகில் கலந்த இசையுடன் பார்வையாளர்களை பயமுறுத்தும் விதமாக இருக்கும். திகைப்பும், பயமும் கலந்த கலவையாக இருக்கும்.

பாம்பென்றால் படையும் நடுங்கும்……வீரர்கள் பலம் பொருந்திய பலசாலிகளிடம் கூட மோதுவார்கள் ஆனால் பாம்பை கண்டால் அனைவரும் தலைதெறிக்க ஓடுவார்கள். ஏன்னென்றால் பாம்பினுடைய விஷம் மனிதர்களை சில மணி நேரங்களிலேயே உயிரை பறிக்கும் அபாயம் மிகுந்தது. மேலும் அதனுடைய வீரியம் அதிகம் இருப்பதால் சற்று பயம் இருப்பது சகஜம் தான். பாம்பானது அதிகம் மனிதர்களை தாக்குவதில்லை. அதை நாம் தொந்தரவு செய்தால் மட்டுமே தாக்கும். கவனமின்மையால் நாம் நடக்கும் பாதைகளிலோ அல்லது வயல்வெளியிலோ மனிதர்கள் அறியாமல் மிதிப்பதால் உடனடியாக தாக்குகிறது. தூரத்தில் வரும் முன்பே நாம் எச்சரிக்கையுடன் கடந்தால் அது நம்மை தொந்தரவு செய்யாது.

சமீபத்தில் கூட ராஜா நாகத்தை ஒருவர் பிடிக்க முற்படும் போது நொடி பொழுதில் அது சட்டென திரும்பி அவரை தாக்க முற்பட்ட விதம் நெஞ்சை உலுக்க வைத்தது…..சமூக வலைத்தளத்தில் மில்லியன் கணக்கில் பார்வையிடப்பட்டது. ராஜா நாகத்தை பார்க்காதவர்கள் கூட ஓ…..இது தான் ராஜ நாகமா என்று வியப்பில் ஆழ்ந்தனர். பாம்புகளை வைத்து படம் எடுத்தாலும், தொடர்கள் எடுத்தாலும் மக்கள் அதனை விரும்பி பார்ப்பார்கள். நாகினி தொடர் பல சீசன்களை தாண்டி மக்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட தம்பிக்கு எந்த ஊரு, அண்ணாமலை , படையப்பா போன்ற சூப்பர் ஹிட் படங்களில் பாம்புடன் நடித்திருப்பார். அனைத்து படங்களிலுமே பாம்புடன் நடிப்பது நகை சுவையாகவும், சுவாரசியமாகவும் இருக்கும். இப்படி பாம்புகளுக்கு என்று தனி மரியாதை இருக்கிறது. இங்கே இரண்டு பெரியவர்கள் பாம்பு நடனம் ஆடி மக்களை கவர்ந்துள்ளனர். அதை இங்கே காணலாம்…..