தாயின் பாசத்திற்கு முன்னால் பென்ஸ் காரவது… ரோல்ஸ் ரோய்ஸ் காரவது… சைக்கிளே போதும்… இது தாங்க வாழ்கை..!

தாய்க்கு ஈடு இணை இல்லை. எப்பேற்பட்ட சூழல் அமைந்தாலும் தாயானவள் தனது குழந்தைகளின் நலன் கருதி அனைத்தையும் எதிர்த்து நின்று போராடுவாள். எந்த மாதிரியான வாழ்க்கை அமைந்தாலும் குழந்தைகளுக்காக அனைத்தையும் பொறுத்து கொண்டு குழந்தைகளை ஒழுக்கமுடன் வாழ்க்கையில் உயர்த்துவதேயே குறிக்கோளாக கொண்டு செயல் படுவாள் அன்னை. அதனால் தான் தாயை மிஞ்சிய தெய்வம் இல்லை என பெரியவர்கள் கூறினார்கள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு…….தன்னுடைய குழந்தைகள் எப்படி இருந்தாலும் அவ்வாறே ஏற்று கொள்வாள் தாய்.

குழந்தைகளுக்கு என்ன வேண்டுமோ அதை நிறைவேற்றுவதற்கு அரும் பாடுபடுவாள், இன்றும் வீட்டு வேலை செய்து தனது குழந்தைகள் மேற் படிப்பிற்காக தினம் தினம் வேலைக்கு செல்லும் பெண்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் கூட நீயா நானா-வில் காலை 5-மணிக்கே வேலைக்கு சென்று மதியம் 3 மணி வரை இடைவேளை இல்லாமல் தொடர்ந்து வேலை செய்யும் தாய்மார்களின் அவல நிலையை எடுத்து கூறியது இந்த நிகழ்ச்சி. அன்றாடம் அவர்கள் வேலை செய்யும் இடங்களில் சந்திக்கும் இன்னல்களையும் சக மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய மனிதாபிமான அடிப்படை வசதிகள் கூட தீண்ட தகாதவர்களாக நடத்தும் விதத்தை கோபிநாத் அவர்கள் நாசூக்காக தெளிவுபடுத்தியிருப்பார். அவ்வாறு சவால்களை எதிர்கொண்டு தனது குழந்தைகளை படிக்க வைக்கின்றனர்.

இங்கு ஒரு தாய் குழந்தையை சைக்கிளில் பத்திரமாக அழைத்து செல்வதற்காக சைக்கிளின் பின் புறத்தில் நாற்காலியை இறுக கட்டிஅதன் மேல் குழந்தையை வைத்து சாலையில் பிரயாணம் மேற்கொள்கிறார். அந்த காட்சிகள் அனைத்து உள்ளங்களையும் கொள்ளை கொண்டுள்ளதை நீங்களும் பார்த்து மகிழலாம்……அந்த வீடியோ இதோ……