செண்டை மேள தாளத்திற்கு ஸ்டைலாக நடனம் ஆடிய சிறுமி…. ரைமிங்காக இசை அமைத்த குழுவினர்…!

இசையை கேட்கும் காதுகள்…… கால்களை நடனம் ஆட வைக்கும்….. நாட்டுப்புற கலைகள் சமீபத்தில் ட்ரெண்டாகி வருகிறது. கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள், கலைநிகழ்ச்சிகள், திருமண விழாக்கள் என்று நாட்டுப்புற கலைகளை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆட தெரியாத நபர்களும் இசையை கேட்டு …..குறிப்பாக நாட்டுப்புற இசை கேட்கும் போது ஆடுகின்றனர்.

நாட்டுப்புற இசையை கேட்கும் போது உற்சாகம் ஏற்படும், சுற்றி இருப்பவர்களை நடனம் ஆட தூண்டும். என்ன தான் நாம் வளர்ச்சி பாதையை நோக்கி சென்றாலும் நம்முடைய பாரம்பரியத்தை விட்டு விலகாமல் பயணிக்கிறோம் என்பதே உண்மை. அதற்கு சமூக வலைத்தளங்களும் முக்கிய காரணம் ஆகும்.

செண்டை மேள குழுவினர் உத்வேகமாக இசை அமைக்க அதற்கு ஒரு சிறுமி ஸ்டைலாக நடனம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.