களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்த பெண்ணா இது?இப்போது என்ன செய்கிறார் தெரியுமா..!

      சில நடிகர்கள் என்னதான் பல படங்களில் நடித்திருந்தாலும் ஏதோ ஒரு படமே அவர்களின் கேரியரைத் தாங்கிப் பிடிக்கும். அப்படியான ஒரு படம் தான் ‘களவாணி’ விமல், ஓவியா கூட்டணிக்கு இந்த படம் எவர்க்ரீன் படம். சற்குணம் இயக்கி கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மெகா ஹிட் அடித்தது.

        களவாணி படத்தில் விமலின் அப்பாவாக வரும் இளவரசு, அம்மாவாக வரும் சரண்யா, நண்பராக வரும் சூரி, பஞ்சாயத்து போர்டு மெம்பராக வரும் கஞ்சா கருப்பு என ஒவ்வொரு பாத்திரமுமே இப்போதும் மக்களின் நினைவில் இருக்கிறது. அதிலும் டம்ம..டம்ம பாடலும் பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இந்தப்படத்தில் விமலின் தங்கையாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி. இவர் சின்னத்திரைப் பக்கத்திலும் நிம்மதி, சவாலே சமாளி, நாணயம் ஆகிய தொடர்களில் நடித்திருந்தார்.

  அண்மையில் இவர் மனம் திறந்து பேட்டி கொடுத்துள்ளார். அதில், ‘4 ஆம் வகுப்பு படிக்கும்போதே தமிழில் ரொம்ப மார்க் எடுத்தேன். அதற்காக தேசிய அளவில் கோல்டு மெடல் கிடைத்தது. காலேஜிலும் 95 சதவிதம் மார்க் எடுத்ததால் கோல்டு மெடல் கிடைத்தது. படிப்பைப் போல் சினிமவிலும் சாதிக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். பாலுமகேந்திரா சார் என்னை ஹீரோயினாகப் போட்டு ஒரு படம் எடுக்க இருந்தார் அவர் இறந்துவிட்டதால் எனக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் ஆகிவிட்டது. இப்போது களவாணி படத்தை எடுத்த சற்குணம் சாரிடம் உத்வி இயக்குனராக இருந்த ஒருவர் கபே என்னும் பெயரில் படம் எடுக்கிறார். அதில் ஹீரொயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளேன்.’ என்கிறார்.

  மேலும் அம்மணிக்கு வாழ்நாள் ஆசை என்றால் அது தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிப்பதுதானாம். ஆனால் பல படங்களிலும் தளபதியின் தங்கையாக நடிக்கவே சான்ஸ் வந்தது. ஆனால் தளபதிக்கு ஜோடியாக நடிக்கும் ஆசையில் தான் நான் தங்கையாக நடிக்கவில்லை. பி.எஸ்.சி விஸ்காம் படிச்சேன். தொடர்ந்து இப்போ சட்டக்கல்லூரி இறுதியாண்டு படித்து வருகிறேன்.  இதுவரை 25 சீரியல் நடிச்சுருக்கேன். அதில் ஏவிஎமில் 5 சீரியல்  செய்திருக்கிறேன். படிச்சு கலெக்டர் ஆகணும்ன்னு ஆசைப்படுறேன்.’’என சொல்லியிருக்கிறார். 

  அவரின் இப்போதைய புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை  சோசியல் மீடியாக்களில் வைரல் ஆன நிலையில் அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே களவாணி படத்தில் வந்த குட்டிப் பெண்ணா இது என கமெண்ட் செய்துவருகின்றனர்.