ஊஞ்சலில் ஜாலியாக கர கர வென சுற்றிய சுற்றிய சிறுவன்.. ஊஞ்சல் நின்றதும் சிறுவன் செய்த்தை பாருங்க… விழுந்து விழுந்து சிரிப்பீங்க..!

         ‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

          குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். வளரிளம் பருவத்தில் குழந்தைகள் செய்யும் சேட்டையையும், அவர்களின் ரசனையையும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். 

 ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும். குழந்தைக்காக இதனால் தான் பலரும் தவம் இருக்கிறார்கள். குழந்தை இல்லாததன் வலி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மட்டும்தான் தெரியும்.

  இங்கேயும் அப்படித்தான் ஒரு குட்டிக்குழந்தை செம ஜாலியாக இருந்தது. அந்தக் குழந்தை ஊஞ்சல் ஒன்றைப் பார்த்ததும் அதில் ஏறி சுற்றியது. கர, கரவென சுற்றிய ஊஞ்சல் நின்றதும் இறங்கி நடக்கத் தொடங்கியது. அப்போது ஏற்கனவே ஊஞ்சலில் இருந்ததால் தலைசுற்றி கீழே விழுந்தது குழந்தை. உடனே எழுந்து மீண்டும் நடக்க முயல மறுபடியும் கீழே விழுந்தது. அதிலும் அந்தக் குழந்தை குடிகாரனைப் போல் தள்ளாடி கீழே விழுந்தது. அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து எழுந்து நடக்க முயன்றபோது, ஒரு புதருக்குள் போய் விழுந்தது. என்னடா இது ஒரே ஒரு ஊஞ்சலில் சுற்றியக் குழந்தையை குவாட்டர் அடிச்ச கோழி மாதிரி ஆக்கிட்டீங்க என நெட்டிசன்கள் இதைக் கலாய்த்து வருகின்றனர்.