உண்மையான நண்பனை ஆபத்தில் அறி…. மனிதர்களுக்கே பாடம் புகட்டிய நாய் குட்டிகளின் பாச போராட்டம்…!

நண்பேண்டா…… ப்ரோ…… என்கிற வார்த்தைகள் இளைய தலைமுறையினர் அதிகமாக உபயோகப்படுத்தும் ட்ரெண்டிங்கான வாக்கியங்கள். வார்த்தைகளுக்கு வலிமை உண்டு…… ஒருவர் சமூகத்தில் பழகும் போது புதிதாக சந்திக்கும் மனிதர்களை யதார்த்தமாக ப்ரோ என்று அழைப்பது அவர்களுக்குள் நல்ல நட்பை உருவாக்கும்.

நண்பர்களுக்குள் எந்த வேறுபாடும் இருக்காது….. எந்த வேறுபாடும்…… காட்டாத ஒரே உறவு என்றால் அது நட்பு மட்டும் தான். உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை ,பணக்காரன் , படித்தவன் , படிக்காதவன் , சாதி, மதம் என்கிற எல்லைகளை தாண்டி நம்முடன் உரிமையுடன் பழகுபவர்கள் நண்பர்களே…….இது எல்லா வயதினருக்கும், எந்த நாட்டினருக்கு பொருந்தும். தகுந்த நேரத்தில் நல்ல வழிகாட்டியாகயும், பிரச்சனை என்றால் உற்றார்,உறவினர்களை விடவும் அதிகமாக அக்கறை கொண்டு பாசத்தோடு உதவி செய்யும் நண்பர்களும் இருக்கிறார்கள். நண்பன் என்கிற வார்த்தையை மெய்ப்பிக்கும் உறவுகள் அமைவது வாழ்க்கையில் ஏணி படி போன்றது நல்ல நண்பர்கள் ஏணி போன்று வாழ்க்கையில் முன்னேறுவதற்கு காரணமாகவும் இருப்பார்கள்.

இங்கு காணொலியில் பாம்பு ஓன்று விளையாடி கொண்டிருந்த சிறிய நாய் குட்டியின் கழுத்தை சுற்றி வளைத்து அதனை கொல்வதற்கு முயன்றது. அப்போது அங்கிருந்த மற்ற நாய் குட்டிகள் பாம்பின் மற்றொரு முனையை கடித்து…. சுற்றிய பாம்பினை நாய் குட்டியின் கழுத்தில் இருந்து விடுவிக்க முயன்றனர். மற்ற இரு குட்டிகளும் வலுவாக பாம்பின் பின் புறத்தை கடித்து பாம்பிடம் அகபட்ட குட்டியை அனைவரும் ஓன்று சேர்ந்து காப்பாற்றினார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஓன்று பட்டால் உண்டு வாழ்வு……என்ற வார்த்தைகளை நிரூபித்த நாய் குட்டிகள் என சமூக வலைதளவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒற்றுமையே உயர்வு என்றுணர்த்திய குட்டிகளில் காணொலியை இங்கே காணலாம்.