முட்டை ஓட்டை தூக்கி விசுபவரா நீங்கள்..? முட்டை ஓடு பொடியில் இவ்வளவு பெரிய பிஸ்னஸ் இருப்பது தெரியுமா?

முட்டை சாப்பிடாத மனிதர்களே இன்று இல்லை எனலாம். ஆம்லேட், பொறியல், பிரட் ஆம்லேட், புல்சை என முட்டையை வேறு, வேறு வடிவங்களில் சமைத்து சாப்பிடுகிறார்கள் நம்மவர்கள். இதோ இந்த கரோனா காலத்திலும் தினமும் சாப்பாட்டில் முட்டையை சேர்த்துக்கொள்ளவே அறிவுறுத்தப்படுகின்றனர்.

இப்படியான சூழலில் நாமெல்லாம் முட்டையை உடைத்து சாப்பிட்டுவிட்டு அதன் கூட்டை தூக்கி வீசிவிடுகிறோம். ஆனால் அப்படி செய்யாமல் முட்டை ஓட்டை உடைத்து ஏற்றுமதியே செய்யலாம் என்னும் தகவல் நிச்சயம் ஆச்சர்யம் அளிக்கக் கூடியதுதானே? ஈரோட்டில் இதற்கென கம்பெனிகளே உண்டு.

இதேபோல் முட்டையின் வெள்ளைக்கரும், மஞ்சள் கருக்களைத் தனித்தனியாக பொடி செய்தும் சில கம்பெனிகள் வெளிநாட்டில் ஏற்றுமதி செய்கின்றன. இதேபோல் முட்டை ஓட்டில் கால்சியம் அதிகளவு இருப்பதால் பயிர்களுக்கும் உரமாகிவிடும். சில நாடுகளில் பாஸ்ட்புட் தயாரிப்பிலும் முட்டையின் கூடு பயன்படுகின்றது. இதுதவிர, வேல்யூ ஆடட் எனப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாகவும் முட்டை ஓடு செல்கின்றது. அழகு பராமரிப்புத்துறையிலும் முட்டை ஓட்டு பவுடர் முக்கியப்பங்கு வகிக்கிறது.

இதேபோல் விளையாட்டு வீரர்களுக்கு புரதச்சத்து அதிகமான உணவை பரிந்துரை செய்வார்கள். அதிலும் முட்டை ஓட்டு பவுடர் பயன்படுகிறது. இதேபோல் பல்சொத்தை, பல்சிதைவு போன்ற சிதைவுகளின்போதும், பல்சொத்தையால் உருவான சிதைவுகளை அடைப்பதிலும் பயன்படுகிறது. இதேபோல் ஷாம்பு தயாரிப்பு கம்பெனிகளும் முட்டை ஓட்டின் பவுடரை பயன்படுத்துகின்றன.

இதற்கு அமெரிக்கா, கனடா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளில் அதிக டிமாண்ட். அப்புறமென்ன இந்த தொழில்வாய்ப்பை வாய்ப்பிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன்..