இப்படிக் கூட சிக்கனை சமைக்கலாமா..?  இவ்வளவு நாள் இது தெரியாதே..!

        சமையல் மிக அற்புதமான கலை. அதிலும் நான் வெஜ் சமையலைப் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். அசைவ சாப்பாடு என்றால் ஒருபிடி பிடிப்பவர்கள் அதிகம். வழக்கமாகவே நாம் சிக்கனை பலவகையில் சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் இதுவரை பார்க்கவே செய்யாத ஒருமுறையில் இங்கே ஒருவர் சிக்கனை சமைத்துள்ளார்.

 அது எப்படி எனத் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைத் தொடர்ந்து பாருங்கள். இதற்கு முதலில் அரைகிலோ சிக்கன் துண்டுகளை நன்றாகக் கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். இதில் அரைலிட்டர் ஸ்பிரைட் ஊற்ற வேண்டும். இது சிக்கனை மூழ்கடிக்கும்வகையில் இருக்க வேண்டும். இது 15 முதல் 20 நிமிடங்களுக்கு நன்றாக ஊறி இருக்க வேண்டும். அதன்பின்பு சிக்கனை மட்டும் தனியாகத் துளியும் ஈரப்பதம் இல்லாமல் எடுக்கவேண்டும். இதில் இனி தேவையான அளவுக்கு உப்பு, மிளகுத்தூள், மிளகாய்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி ஜாஸ் ஒரு ஸ்பூன், சில்லி ஜாஸ் ஆகியவற்றை சேர்ந்து சிக்கனுடன் நன்றாக மிக்ஸ் செய்து, 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும். 

  இது நன்றாக ஊறும்போதே, கால்கப்பு மைதா, இரண்டு முட்டை, பிரட் காஸ்ட் ஆகியவற்றை எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். இப்போது சிக்கனை சிக்கனை இதனோடு போட்டு நன்றாக மூழ்கடித்து எண்ணெயில் போட்டு வேகவைத்து எடுத்தால் ப்ரை சிக்கன் மிக மென்மையாக இருக்கும். வழக்கமாக நாம் சிக்கனை ப்ரை செய்யும்போது நீண்ட நேரம் ஊறவைக்க வேண்டும். ஆனால் ஸ்பிரைட்டை ஊற்றி செய்யும் போது வெறும் 20 நிமிடத்திலேயே சிக்கன் ப்ரை செய்துவிடலாம்.