இப்படி கூட ரசம் செய்யலாமா..? அடடே இத்தனை நாள் இது தெரியாமப் போச்சே… ஈஸியாகச் செய்ய டிப்ஸ்..!

    மாங்காயை பிடிக்காதவர்களே இல்லை என சொல்லிவிடலாம். சின்ன வயதில் மாங்காயை குறிபார்த்து கல்லெறிந்து, அதிலும் திருடி சாப்பிடாத 90ஸ் கிட்ஸ்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதோபோல் மாங்காயும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு ருசிக்காதவர்களும் இருக்க மாட்டார்கள்.

  இதோ இப்போது இந்த மாங்காயில் சூப்பரான ரசம் கூட வைக்கலாம் என்னும் தகவல் வெளியாகி உள்ளது. எப்படி எனக் கேட்கிறீர்களா? இதோ அந்த மாங்காய் ரசத்தின் செய்முறை உங்களுக்காக…

     மாங்காயை கிரில் பேட் எடுத்து முதலில் சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் மாங்காயின் அனைத்துப் பக்கங்களிலும் கரு, கருவென வரும் அளவுக்கு சுட்டு எடுக்க வேண்டும். அப்படி சுடும்போது சிலநேரங்களில் வெடித்து உள்ளே இருந்து தண்ணீர் வரும். அப்படி வந்தாலும்கூட தொடர்ந்து சுட வேண்டும். ஸ்டவ்வை மெதுவாக எரிய விட்டு சுட வைக்க வேண்டும். 5 நிமிடத்திலேயே நன்கு கரு, கருவென சுட்டுவிடலாம். தொடர்ந்து அதை ஒரு தட்டில் போட்டு ஆறவைக்க வேண்டும். அந்த இடைவெளியில் நாம் பச்சைமிளகாயை போட்டு சுட்டு எடுக்க வேண்டும். அதையும் ஆறவைக்க வேண்டும்.

  தொடர்ந்து நாம் மிக்சியில், சுட்டெடுத்த பச்சைமிளகாயையும், மல்லிவிதை(தனியா)யையும் சேர்த்து, அதனோடு ஒரு ஸ்பூன் சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். தொடர்ந்து சுட்டெடுத்த மாங்காயின் மேல் தோளை உரித்து எடுக்க வேண்டும். அதன்பின்பு ஒரு பாத்திரத்தில் ஒரு செம்பு அளவுக்கு தண்ணீர் விட்டு, அதில் சுட்டெடுத்த, தோல் உரித்த மாங்காயைப் போட்டு பிசைந்து எடுக்கவேண்டும். ரசத்திற்கு புளி கரைப்பது போல் இதைக் கரைத்துவிட்டு கொட்டையைத் தூக்கி வெளியே போட வேண்டும். இப்போது அரைத்து வைத்திருக்கும் கலவையை இதில் சேர்த்து கையால் நன்கு கலக்கி விட வேண்டும். இதில் புளிப்பு அதிகமாக இருப்பதாகத் தோன்றினால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

     இதில் தாளித்து ஊத்துவதற்கு ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் இரண்டு பெருங்காயம், தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்ந்து தாளித்து மாங்காயை நாம் கரைத்து வைத்திருக்கும் கலவையை அதில் ஊற்றவேண்டும். இதில் வாசனைக்கு தேவைப்பட்டால் கொஞ்சம் கொத்தமல்லி இலைகளைத் தூவலாம். இதை ஊற்றியதுமே ஸ்டவ்வை அணைத்து விடலாம். சூப்பரான, சுவையான மாங்காய் ரசம் ரெடியாகிவிடும். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன். இதோ இதன் செய்முறை விளக்கத்தை இந்த வீடியோவில் பாருங்கள்…