போட்டாகிராபரால் நடந்த பயங்கரம்.. மணமக்களுக்கு என்ன ஆச்சு பாருங்க..!

திருமண வீடுகளில் முன்பெல்லாம் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் டேன்ஸ் கிளப்பாகவும் மாறிவருகின்றது. இதுவும் அப்படியான ஒரு விசயம் தான்! அட ஆமாங்க. இப்போதெல்லாம் என் திருமணத்தில் நான் எப்படி ஆடியிருக்கேன் பாருங்கள் என மணப்பெண்கள் தாங்களே வீடியோவே போஸ்ட் செய்வதும் பேஷன் ஆகிவிட்டது. 

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.  திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என  வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. 

        இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் இந்த மணமக்கள் நடனத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதிலும் திருமணத்திற்கு முன்னும், பின்னும் மணமக்களை அழைத்து எடுக்கும் போட்டோ சூட்கள் ரொம்பவே பேமஸ்.

  இங்கேயும் அப்படித்தான் மணமகனையும், மணமகளையும் போட்டோ சூட்டிற்காக அழைத்துக்கொண்டு போனார் ஒரு போட்டோகிராபர். தண்ணீர் செல்லும் சின்ன ஒரு சிற்றோடையின் மேலே நடந்து செல்வதற்கு ஏதுவாக ஒரு தென்னை மரம் வெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன்மேல் நடந்து சென்று இருவரையும் நிற்கவைத்து கப்பிள் போட்டோகிராபி செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மாப்பிள்ளை நிலை தடுமாறி கீழே விழ, கூடவே மணப்பெண்ணையும் சேர்த்து இழுத்துக்கொண்டு தண்ணீரில் விழுகிறார். இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.