சாதா பைக்கை வைத்து ஸ்போர்ட்ஸ் பைக்குக்கு இணையாக மிக பெரிய மலையேறி சாதித்த இளைஞ்சர்.. நீங்களே பாருங்க..!

   என்னதான் ஆடம்பர கார் வசதியெல்லாம் இருந்தாலும் பைக்கில் செல்வது ஒரு ஜாலிதான். இதனாலேயே பைக் ரைடை பிடிக்காதவர்களே இல்லை என சொல்லிவிடலாம். 

 இவ்வளவு ஏன் தமிழமே கொண்டாடும் தல அல்டிமேட் ஸ்டார் அஜித் சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் தீவிரமான பைக் ரேஸ் ப்ரியர். அதேபோல் இன்றெல்லாம் வீக் எண்ட் என்றாலே யூத்கள் பைக்கை எடுத்துக்கொண்டு எங்காவது ஜாலி ட்ரிப் போய்விடுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். அண்மையில் வெளியான அஜித்தின் வலிமை படம் கூட பைக் ரேஸை மையப்படுத்தி நிறைய காட்சிகள் வரும். அதில் மலையேற்றப் பாதையில் எல்லாம் சர்வ சாதாரணமாக பைக்கில் பறப்பார்கள்.

  இப்போது அதேபோல் நிஜத்திலேயே ஒருவர் பைக்கில் சாகசம் செய்கிறார். மலையேற்றத்தில் ரொம்ப கூலாக தன் பைக்கை ஊர்ரென உறுமச் செய்து பறக்கிறார். செம ஸ்பீடாக அவர் மலையேற்றப் பாதையில் பைக்கில் செல்கிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.