நண்பேண்டா… கோழி தப்பித்து ஓட உதவிய நாய்.. கோழியை காப்பாற்ற என்ன வேலை செய்யுதுன்னு பாருங்க..!

பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். நாய்கள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது. இங்கேயும் அப்படித்தான் ஒருவர் தன் வீட்டில் நாய் வளர்க்கிறார். கூடவே தன் வீட்டில் நாட்டுக்கோழியும் வளர்த்து வந்தார்.

வீட்டு வாசலில் ஒரு கூடையில் வைத்து நாட்டுக்கோழி மூடி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தன் நாய்க்கு உணவு அளிக்க உரிமையாளர் கண் அசந்த நேரத்தில் நாய் ஓடிப்போய் கூடையை திறந்து சேவலை தப்பித்துப் போக வைத்தது. அதை உரிமையாளர் ஓடிப்போய் பிடிக்க முயல நாய் விடாமல் அவரைத் தடுக்கிறது. கூடவே, கோழியை தப்பிக்க வைக்க படு பயங்கரமாக போராடுகிறது. மனிதர்களுக்கு மட்டுமே உரியதாக நாம் நம்பிக் கொண்டிருக்கும் இந்த இரக்கக் குணத்தில் ஒரு நாய், கோழியை தப்பிக்க வைத்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்கள்..