காதல் படத்தில் குட்டிபையனாக வந்த அருண்குமாரா இது?சினிமாவை விட்டுவிட்டு இப்போ என்ன செய்யுறாரு பாருங்க..!

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடித்த காதல் படம் மெகா ஹிட் அடித்தது. இந்த படத்தில் அறிமுகமான சந்தியாவின் பெயரே காதல் சந்தியா என மாறியது. பரத் இந்த படத்தில் டூவீலர் மெக்கானிக்காக நடித்திருந்தார்.

    மெக்கானிக் பையன், பணக்கார வீட்டு பெண் இடையேயான காதலை உயிரோட்டத்துடன் இந்தப்படம் பேசியது. இந்தப்படம் பரத், சந்தியா இருவரது கேரியரிலும் மிக முக்கியமான படமாக இருந்தது. கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மெகா ஹிட்டானது. இந்த படத்தில் மெக்கானிக் ஷாப்பில் பரத்துடன் குழந்தை நட்சத்திரமாக அருண்குமார் என்பவர் நடித்திருந்தார். டீயில் துப்பிக்கொடுக்கும் காட்சி இவரது நடிப்பில் அப்போது செம பேமஸாக இருந்தது.

   தொடர்ந்து விஜய் நடித்த சிவகாசி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருந்தார். ஊடவியலாளரும், சினிமா உதவி இயக்குனருமான புஹாரி அருண்குமாரைச் செய்த நேர்காணல் ஒன்று வைரல் ஆகிவருகிறது. அதில் அவர், ‘மரக்கடையில் பர்னிச்சர் வேலை செய்கிறேன். ஸ்கூலில் நாடகம் நிறைய நடிப்பேன். அப்படி ஒருநாள் பள்ளிக்கூடத்தில் நாடாம் நடிச்சப்போ அதைப் பார்த்த டைரக்டர் எனக்குக் காதல் படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். அப்போ நான் 6 ஆம் கிளாஸ் படிச்சுட்டு இருந்தேன். காதல் அருண்குமாரின் தற்போதைய நிலைன்னு யூடியூப்பில் நிறைய பொய் போட்டுறாங்க. மதுரை தான் எனக்கு பூர்வீகம். 2005 ல இருந்து 2008 வரை சினிமாவில் பிஸியாத்தான் இருந்தேன்.

   குடும்பத்தில் சின்ன பிரச்னையால் சினிமாவை விட்டுவிட்டு பர்னிச்சர் வேலைக்கு வந்துவிட்டேன். 9 ஆம் வகுப்புவரை படிச்சுருக்கேன். எனகு 2 அண்ணா, 2 அக்கா..நான் தான் கடைசி பையன். சினிமா வாய்ப்பு இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். காதல் படம் போலவே எனக்கு லவ் மேரேஜ் தான். முடிந்தவரை பொறுமையாக இருந்து, இருகுடும்ப சம்மதத்துடன் கல்யாணம் செய்ய விரும்பி, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்பு தான் கல்யாணம் ஆனது. இப்போது எனக்குன்னு ஒரு தொழில் இருக்கு. பர்னிச்சர் தொழில் எனக்குப் போதும். சினிமா என் கனவு. அதிலும் முயற்சித்துக்கொண்டே இருக்கிறேன். உணவு, உடை, உறைவிடம் தான் மனிதனுக்கு அத்தியாவசியம். அது எனக்கு இருக்கிறது. அது போதும் எனக்கு!’’என்கிறார்.