என் கண்ணையா நோண்டுற…. இப்ப பாரு மண்டய வைத்து முட்டுறேன் என்று தனக்கு தானே மோதி கொண்ட சிறுமி… மில்லியன் மனங்களை கொள்ளை கொண்ட காணொளி..!

சிறுவர், சிறுமிகள் தினம் தினம் புதிதாக பிறந்து கொண்டே இருப்பார்கள்…..அதற்கு காரணம் அவர்களுடைய சின்ன சின்ன குறும்பு தனங்களே ஆகும். நாளுக்கு நாள் அவர்களின் குறும்பு தனத்திற்கு அளவே இல்லாமல் இருக்கும்.வீட்டில் இருக்கும் பெரியவர்களே களைப்படைந்து விடுவார்கள். சில குழந்தைகள் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் அதற்கு அவர்கள் பெற்றோரின் மிக கடுமையான கண்டிப்பு காரணமாக இருக்கும், இல்லையேல் அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் காணப்படும் குழந்தைகளாக இருப்பார்கள். அவர்களின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சோர்வாக காட்சியளிப்பார்கள்.

குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும் போது அவர்கள் செய்யும் குறும்புகளால் உடன் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் உண்டெனில் அது குழந்தைகளின் இருதயமே. குழந்தைகளின் சிரிப்பு, குறும்பு, மழலை சொல், பாடல், நடனம், நடை, தூக்கம், அழுகை அனைத்துமே அழகு தான். தூங்கும் போது புன்னகை புரிவது அழகு, பொக்கைவாயில் சாப்பிடுவது அழகு, கோபம் கொண்டு பேசுவது அழகு . இந்த உலகத்தில் கலப்படமே இல்லாத உறவு குழந்தைகளே…..

இங்கு ஒரு சிறுமி கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை பார்த்து விளையாடுவதோடு இறுதியில் கோபம் கொண்டு கண்ணாடியில் தெரியும் தனது உருவத்தை பார்த்து கண்ணை நோண்டுவதும் தலையால் முட்டியும் சேட்டை செய்யும் காட்சிகள் நாடு விட்டு நாடு தாண்டி மில்லியன் மனங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த காணொலியை இங்கே காணலாம்