இவரு சிவாஜி கணேஷன், shinchan ரசிகரா இருப்பாரோ… இருவரின் கலவையில் குட்டி சிறுவன் போட்ட ஆட்டத்தை பாருங்க..!

குழந்தைகள் எந்த கவலையுமின்றி சந்தோசமாக சேட்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் துரு துருவென விளையாடி கொண்டே இருப்பார்கள். தனி ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது போல் இருக்கும். பள்ளி சென்ற பின்னரே அவர்கள் சேட்டை செய்வது குறையும். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மகிழ்ச்சியாகவும், கலகலப்பாகவும் இருப்பதோடு மழலை மொழியில் பேசுவது கேட்டு கொண்டே இருக்கலாம் போன்று எண்ணம் ஏற்படும். குழந்தைகள் பாடுவதை கேட்பதற்கும், நடனம் ஆடுவதை பார்ப்பதற்கும் கண்கள் போதாது. மறுபடியும் அதை செய்….இதை செய் என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள் பெரியவர்கள்…..

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் கற்றல் திறன் அதிகமாக இருக்கும். வீட்டில் பெரியவர்கள் செய்வது போன்றே அவர்களும் நடந்து கொள்வார்கள், மற்றும் அவர்களுடைய பேச்சும் அவ்வாறே பிரதிபலிக்கும். சில உறவினர்கள் இப்படி அங்கலாய்ப்பதும் உண்டு என்னா பேச்சு பேசுது பாரு…..பெரியவங்க மாதிரியே பேசுது என அவர்களுக்குள் பேசிகொள்வார்கள் …..இப்படி குழந்தைகள் தங்கள் வீடுகளில் உள்ள பெரியவர்கள் போன்றும் வயதானவர்கள் போன்றும் நடந்து கொள்வார்கள். இதை தான்

நடிகர் சூர்யா தன்னுடைய படத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுகிறார்கள் என்று கூறும் போது அவர் பதிலாக குழந்தைகள் எப்போதும் கெட்ட வார்த்தை பேசமாட்டார்கள்…. கேட்ட வார்த்தைகள் தான் பேசுவார்கள் என்று விளக்கம் அளித்திருப்பார். ஆதலால் குழந்தைகள் முன்பு வார்த்தைகளை மரியாதையாகவும் அவர்களிடம் கண்ணியத்தோடும் நடந்து கொள்ள வேண்டும் என்பது அதன் பொருளாக இருக்கும். இங்கு ஒரு குட்டி சுட்டி பையன் ஒரு பாடலுக்கு நம்ம shin chan போன்றே நடனம் ஆடி இருப்பதாக இணைய வாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.