இந்த காயை சாப்பிடுங்க உங்கள் எடை கணிசமாகக் குறையும் அதிசயம் காண்பீர்கள்..!

இன்றைய தலைமுறையினர் பலரும் இன்று சந்திக்கும் பிரச்னைகளில் மிக முக்கியமானது அதீத உடல் எடை. அதிலும் இப்போது லாக்டவுணில் பல நிறுவனங்களும் வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்துவிட்டன இதனால் அவர்கலின் சின்ன, சின்ன அன்றாட நடைமுறைகளும் நின்றுபோய் இருக்கிறது. இதனாலும் பலர் உடல் எடை கூடிவிட்டனர்.

இந்நிலையில் உங்கள் கொழுப்பைக் குறைத்து, உடம்பை ஸ்லிம்மாக வைக்கும் சூத்திரம்தான் இது. முயற்சித்துப் பாருங்களேன்..

சுரைக்காய்தான் இந்த மேஜிக்கை நடத்துகிறது.இதில் விட்டமின் ஏ, சி, பி1, பி 2, பி 3, பி 5 ஆகியவையும் உள்ளது.கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம், குறைந்தளவு சோடியமும் உள்ளது.அதிக அளவு நார்ச்சத்தும், 90 சதவிகிதம் நீர்சத்தும் உள்ளது.சுரைக்காயில் உள்ள நார்ச்சத்து, உணவை எளிதில் செரிக்கவைக்கிறது.இது உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் துணை செய்கின்றது.இது குடலில் உள்ள நச்சுப்பொருள்களை கழிவாக வெளியேற்றுவதிலும் பெரும்துணை செய்கிறது.

சுரைக்காய் சாப்பிட்டால் குறைவாக சாப்பிட்டாலும் வயிறுநிறைந்த உணர்வு கிடைக்கும். இதனால் குறைந்தளவு எரிசக்தியும் கிடைக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் அடிக்கடி இதைச் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறைவதை நாமே உணரமுடியும்சுரைக்காயை வாங்குவதிலும் ஒரு நுட்பம் இருக்கிறது. அதாவது சுரைக்காயை வாங்கும்போது மேல்தோலை நகத்தால் கீறிப்பார்த்து வாங்கவேண்டும். அப்போது மேல்தோல் எளிதாக வரவேண்டும். இளம் பச்சை வண்ணத்தில் இருக்கும் இளம் சுரைக்காயாக பார்த்து வாங்கவேண்டும்.