80ஸ் 90ஸ் களில் கலக்கிய வில்லன்… சினிமாவுக்காக உதறி தள்ளிய அரசு வேலை… இவரை பற்றி பலருக்கும் தெரியாத தகவல்..!

இப்ப என்ன செய்வீங்க….இப்ப என்ன செய்வீங்க…….என்ற காமெடி 80-ஸ் மற்றும் 90-ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான நகைச்சுவை காட்சிகள். இது இடம்பெற்ற படம் குரு சிஷ்யன். இந்த மெகா ஹிட் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளைய திலகம் பிரபு அவர்கள் கதாநாயகனாக கௌதமி கதநாயகியாக அறிமுகம் ஆன படம். மேலும் இப்படத்தில் சீதா கதநாயகியாக பிரபுவிற்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் காமெடி கலந்த வில்லன் போலீஸ் அதிகாரியாக வினு சக்கரவர்த்தி அவர்கள் நடித்திருப்பார்கள். இவர் கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேலாக நடித்திருக்கிறார்.

வினு சக்கரவர்த்தி அவர்கள் அநேக படங்களில் கிராமத்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.அதே போன்று குணசித்திர வேடங்களிலும், காமெடி காட்சிகளிலும் நடித்து மக்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளார். திரைத்துறைக்கு வருவதற்கு முன்னால் இவர் தனக்கு கிடைத்த அரசு வேலையையும் தியாகம் செய்துள்ளார்.

வினு சக்கரவர்த்தி அவர்கள் பிறந்தது மதுரை மாவட்டம், உசிலம்பட்டி. இவர் 6 வயது இருக்கும் போதே மேடையில் நாடக நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார். மேலும் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். இவர் பள்ளி படிப்பை ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லே பள்ளியிலும், கல்லூரி படிப்பை எ.எம்.ஜெயின் கல்லூரியில் வணிக பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். இவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே I.G அருள் அவர்களால் நேரடியாக காவல் துறையில் வேலை வழங்கப்பட்டது. ஆறு மாதம் பணிபுரிந்தவர் பின்னர் இரயில்வே துறையில் நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் இவர் மருத்துவ விடுப்பு எடுத்து கொண்டு முதன் முதலாக கன்னட திரைத்துறையில் இயக்குனர் புட்டண்ணா கனக்களிடம் கதாசிரியராக பணிபுரிந்து வந்த போது தயாரிப்பாளர் திருப்பூர் மணியின் அறிமுகம் கிடைத்துள்ளது.இந்நிலையில் இவர் கதாசிரியராக பணிபுரிந்த ப்ரஸ்க்கே கண்ட தின்மா படம் வெற்றிபெற்றதை அடுத்து தயாரிப்பாளர் திருப்பூர் மணி அவர்கள் தமிழில் சூப்பர் ஹிட் படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற பெயரில் நடிகர் சிவகுமாரை கதாநாயகனாக வைத்து படம் எடுத்தார். இது நடிகர் சிவகுமாரின் நூறாவது படமாக அமைந்தது.

ரோசாப்பூ ரவிக்கைகாரி திரைப்படத்தில் அறிமுகம் ஆன பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு,படகா போன்ற திரை துறையில் நடித்து வெற்றி வாகை சூடியுள்ளார். இவரது 1000மாவது படம் இயக்குனர் மற்றும் நடிகர் இயக்கி நடித்த ராகவா லாரென்ஸ் எடுத்த முனி படத்தில் கதாநாயகனுக்கு தந்தையாக நடித்திருப்பார். மேலும் இவர் சிலுக்கு என்ற நடிகையை திரைத்துறையில் வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். பின் நாட்களில் சில்க் ஸ்மிதா என்ற பெயரில் பிரபல கதாநாயர்களுடன் நடித்து புகழ் அடைந்தார்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் குரு சிஷ்யன் திரைப்படத்தில் கதாநாயகனுடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் நடித்து அசத்தியிருப்பார். நடிகர் முரளி, வைகை புயல் வடிவேலுவுடன் சுந்தரா ட்ராவெல்ஸ் திரைப்படத்தில் காமெடி காட்சிகளில் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்திருப்பார். இவரது மகள் அமெரிக்காவில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார், இவரது மகன் லண்டனில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் உடல் நலக்குறைவால் 2017-ம் ஆண்டு காலமானார்.