இந்த வாத்து போன ஜென்மத்தில் நடிகனா பிறந்திருக்குமோ…? கார் அருகில் வந்ததும் நடிப்பைப் பாருங்க..!

மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு ஐந்தறிவுதான் என நாம் படித்திருக்கிறோம். ஆனால் சில நேரங்களில் மனிதர்களை விடவும் பிற உயிரினங்கள் புத்திசாலியாக இருப்பது உண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மனிதனையும், பிற உயிரினங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதே அறிவாற்றல் தான். அந்த அறிவாற்றலைக் கொண்டுதான் நடிப்புத்திறமையை எல்லாம் காட்டுகின்றனர். இங்கே நாரைப் பறவை ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்தது. அதன் பின்னால் ஒரு கார் நிறுத்தப்பட்டு இருந்தது. டிரைவர் காரை எடுக்க முயற்சித்தார். கார் நாரையின் மீது படவே இல்லை. டிரைவர் காரை எடுக்க முயற்சித்ததுமே, அந்த நாரைப் பறவையானது தன் மேல் கார் ஏறிவிட்டது போல் சீன் கிரியேட் செய்கின்றது.

கூடவே அந்த நாரைப் பறவை அதனால் மயங்கி விழுந்தது போலவும் நடிக்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். நடிப்பில் சீயான் விக்ரம், கமலையெல்லாம் மிஞ்சி விடும் போல் இருக்கிறது. வீடியோ இதோ…