இப்படி தான் நம்மளை ஏமாற்றுகிறார்கள்… மில்லியன் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய இரு சிறுவர்கள்..!

இணையத்தளம் வந்த பிறகு அசுர வேகத்தில் அனைத்து தகவல்களும் பகிரப்பட்டு வருகின்றன. பல வலைத்தளங்கள் மக்களை அடிமைபடுத்தி வருகிறது, பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு 90-ஸ் கிட்ஸ் தொலைக்காட்சியில் மூழ்கினர். பெற்றோர்கள் 90-ஸ்யை எப்போதும் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புகார் கூறி வந்தார்கள். படிப்பில் பின்தங்கினால் சில வீடுகளில் தொலைக்காட்சி தொடர்புகளை நிறுத்தியும் வைத்துவிடுவார்கள்…..ஒரு சில வீடுகளில் தூர்தர்சன் தவிர மற்ற தனியார் தொலைக்காட்சி இணைப்பு வசதிகள் இல்லாத வீடுகளும் இருந்தன. அப்பதெல்லாம் வதந்திகள், நம்பக தன்மை குறைந்த நிகழ்வுகள் பரவுவது குறைவாகவே இருந்தது.

தற்போதுள்ள காலம் 2கே-காலம் இங்கு எல்லாம் நொடிப்பொழுதில் தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது. இங்கு எது உண்மை, எது பொய் என்று வேறுபடுத்தி அறிவது சற்று யோசிக்கவேண்டிய காரியமாக இருக்கிறது. இளைஞர்கள் தங்கள் பொன்னான நேரங்களை இணையத்தில் செலவழித்து வருகின்றனர். வாட்ஸ்அப், பேஸ் புக், யூ-டூப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர்,ஷேர் ஷாட் போன்ற வலைத்தளங்களில் நேரம் கரைவது தெரியாது அடிமையாகி வருகின்றனர். கல்விக்கும், வாழ்க்கைக்கும், முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த வேண்டிய காரியங்களுக்காக செலவு செய்வதை காட்டிலும், பொழுதுபோக்கிற்காக நேரத்தை செலவு செய்வது வருத்த பட வேண்டிய ஓன்று.

சில கானொலிகள் பயனுள்ளவையாக இருந்தாலும், சில வேடிக்கையாக இருந்தாலும் ஒரு சில கருத்துக்கள், காணொலிகள் மக்களை ஏமாற்றும் வித்தைகள் கொண்ட காணொலிகளாக இருக்கின்றன. அவ்வாறு ஒரு சம்பவத்தை இரு சிறுவர்கள் செயலில் காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது மக்களுக்கு நன்மைபயக்கும் விதத்தில் அமைந்துள்ளது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மேல்……. என்ற பொன் மொழிகள் நமக்கு நினைவுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த காணொலியை மக்கள்…… சிறுவர்களின் விழிப்புணர்வு செயலை பாராட்டி கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்……..அதை இங்கே காணலாம்……