பள்ளி மாணவிகள் ஆடிய அற்புத நடனம்… கிராமிய மணம் மாறாமல் எவ்வளவு அழகாக ஆடுகின்றனர் பாருங்க..!

மாணவ மாணவிகள் தங்கள் கலை திறனை வளர்ப்பதற்கு கல்வி கூடங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தனியார் கல்விக்கூடங்களில் திறன் மேம்பாட்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் இதற்கு தனியாக கட்டணம் வசூலிப்பார்கள். இதில் பங்குபெறும் மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடைப்பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

அரசு பள்ளிகளில் மாணவ,மாணவிகளுக்கு கலை திறனை வளர்ப்பதற்கு தனியாக ஆசிரியர்கள் நியமித்து கை வினை பொருட்கள் செய்வதற்கான பயிற்சிகள், நடன பயிற்சிகள் போன்றவை வழங்கப்படுகிறது. அரசு மாணவ மாணவிகள் தங்கள் கலை திறனை வெளிப்படுத்தி வரும் நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு சிறந்த நிகழ்வுகளை பள்ளி கல்வி துறை அதிகார பூர்வ வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறது. இணையவாசிகள் மாணவர்களின் திறனை கண்டு ஆச்சர்யத்தோடு மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

காவடியாட்டம் முருக பெருமானுக்கு பக்தர்கள் வேண்டுதலுக்காக பால் காவடி, பன்னீர் காவடி, மச்ச காவடி, சர்ப்ப காவடி, பறவை காவடி, தூக்கு காவடி, வேல் காவடி,வெள்ளி காவடி, பாட்டு காவடி, தாழம்பூ காவடி, சந்தன காவடி, மிட்டாய் காவடி, தயிர் காவடி, தேன் காவடி, அக்னி காவடி, சேவல் காவடி என பக்தர்கள் அவர்கள் வேண்டுதலுக்கேற்ப விரதம் இருந்து காவடி சுமந்து பழனி மலை முருகன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

தற்போது காவடியாட்டம் கலை நிகழ்ச்சிகளில் தொழில் முறை ஆட்டமாக ஆடப்படுகிறது. தொழில்முறை ஆட்டத்தில் ஆடுபவர்கள் சுழன்று ஆடுதல், வளைந்தாடுதல், குனிந்தாடுதல், கை விரித்தாடுதல், வில்லாடுதல் போன்ற வகைகளில் நடனம் ஆடுவது தொழில் முறை ஆட்டமாக ஆடப்படுகிறது.

இங்கு பள்ளியில் மாணவிகள் ஆசிரியரின் வழிகாட்டுதலோடு ஆடிய காவடியாட்டம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது…… மாணவிகளின் ஆர்வத்தையும், கலைநயத்தையும் இணையவாசிகள் வாழ்த்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்த காணொலியை இங்கே காணலாம்…..