யாரு சாமி நீ…. முட்ட வந்த பேருந்துக்கு முத்தம் கொடுத்து வழி அனுப்பி வைத்த போதை ஆசாமி..!

நடுரோட்டில் போதையில் உட்கார்ந்திருந்த ஒருவர் எதிரே முட்ட வந்த பேருந்துக்கு முத்தம் கொடுத்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக மது பிரியர்கள் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை என சொல்லிவிடலாம்.

குடித்து விட்டால் அவர்கள் என்ன செய்வது என்பது அவர்களுக்கே தெரியாது. பிடித்த போதையில் சிலர் பாரிலேயே தூங்கி விடுவார்.சிலர் ரோடு வீதி என பார்க்காமல் போதையில் எந்த இடம் என தெரியாமலேயே மயங்கி விடுவார்.ஒரு சிலரோ போதையில் டான்ஸ் ஆடுவது ஆட்டம் போடுவது அடிதடி செய்வது என ரகலையில் ஈடுபடுவர்.

அந்த வகையில் இந்த நபர் ஒருவர் போதையில் நடுரோட்டில் உட்கார்ந்து செய்யும் லூட்டியானது வைரலாகி வருகிறது. குடித்துவிட்டு எதிரே பஸ் வர்றது கூட தெரியாமல் அருகில் வந்த பஸ்ஸுக்கு முத்தமும் கொடுக்கிறார். இது வீடியோ பதிவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ இணைப்பு கீழே… நீங்களே பாருங்க இந்த மனுஷன் செய்ற வேலைய..