தகப்பனின் பெருமையை அருமையாக பாடிய பள்ளி மாணவி… உண்மையும் உதிரமும் கலந்து மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்…

தாய்….தந்தைக்கு …..பிறகு ஒரு சில உறவுகளே நம்முடன் அதிகம் நெருக்கம் காட்டும். மேலும் பெற்ற தாய்…தகப்பன்…போல் உண்மையான பாசம் கொண்ட உறவுகள் நமக்கு கிடைப்பது வரம். தாய் நம்மை அன்புடனும், பாசத்துடனும்….கொஞ்சி…செல்லமாக வளர்ப்பார்கள். தந்தை நாள் முழுக்க அரும்பாடுபட்டு வியர்வை சிந்தி சிறுக சிறுக பணத்தை சேர்த்து தம் குழந்தைகளை படிக்க வைப்பார்கள். அவர்களின் எதிர்காலத்திற்காக அல்லும் பகலும் ஓயாது உழைக்கும் தந்தைக்கு நிகராக யாரும் வர இயலாது. வெளிப்புற தோற்றத்திற்கு கடினமாக தோன்றினாலும் குழந்தைகள் மேல் அதிக அக்கறை மற்றும் பொறுப்புணர்வோடு செயலாற்றுபவர் தந்தை.

லிட்டில் பிரின்சஸ்ஸுக்கு என்றுமே தந்தை தான் தன் முதல் ஹீரோ….தந்தைகளும் தம்முடைய அம்மாவிற்கு பிறகு தம் மகள் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். அனைவரிடமும் அன்பு இருந்தாலும் மகள் மீது அளவு கடந்த பாசம் இருக்கும்.தந்தைக்கு தம் மகள் என்றுமே இளவரசி தான். வீட்டில் லிட்டில் பிரின்சஸ் செய்யும் லூட்டிகள் தந்தைக்கு மட்டுமே மிகவும் பிடிக்கும். அவர்களின் சொல்லுக்கு மட்டுமே தந்தை கட்டுப்படுவார்.

வீட்டில் இளவரசி போல் வளர்த்த மகள் திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் போது அதிக கலக்கம் அடைவது தந்தைகள் தான்…..பிறகு உடன் பிறப்புகளான அண்ணன், தம்பி, தங்கை. செல்லமாக வளர்த்த மகள் இன்னொரு வீட்டிற்கு விளக்கேற்ற செல்லும் போது தந்தை தம் மகள் மீது கொண்ட அதிகாரத்தினை இழப்பது போல் உள்ள உணர்வு அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதை அவர்கள் வெளிக்காட்டி கொள்வது இல்லை. திருமண வைபவம் முடிந்த பின்னர் மறு வீடு செல்லும் போது தந்தைமார்கள் கலங்கும் காணொலிகளை இணையத்தில் நாம் காணலாம்…..

இங்கே காணொலியில் தம் தந்தை எவ்வாறு தன்னை பல இன்னல்களுக்கு மத்தியில் படிக்க வைக்கிறார் என்றும்….அவர் படும் கஷ்டங்கள் குறித்தும் மிக அழகான குரலில் உண்மையும், உதிரமும் கலந்த இந்த பாடலை அரசு மாணவி ஒருவர் தத்துரூபமாக பாடி சமூக வலைதளவாசிகளை கலங்க வைத்திருக்கிறார். தற்போது அந்த மாணவியின் பாடல் வைரலாக மாறியுள்ளது. அந்த காணொலியை இங்கே காணலாம்…