பசங்க படத்தில் நடித்த சிறுவனுக்கு திருமணமா…? ஜோடி யாருன்னு பாருங்க..!

2009-ம் ஆண்டு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திற்கான தேசிய விருது பெற்றார் கிஷோர். அதன் பின்னர் கோலிசோடா, நெடுஞ்சாலை, வஜ்ரம், சாகா ,உறுதிக்கோல் , வீட்டு உரிமையாளர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவர் சமூக வலைத்தளத்தில் பிறந்த நாள் வாழ்த்தினை தனது தோழிக்கு பதிவிட்ட வலைத்தளத்தில் அடுத்த வருடம் நாம் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக பிறந்தநாள் மற்றும் பிற நல்ல நிகழ்ச்சிகளை கொண்டாடுவோம்……. என்றும் அந்த நாளை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். அதனால் தற்போது அவருடைய வருங்கால மனைவி யார் என இணையவாசிகள் தேடிய போது அவர் விஜய் தொலை காட்சி ஆபீஸ் தொடரில் நடித்த ப்ரீத்தி குமார் என்று அறிந்து கொண்டனர். அவர் சின்னத்திரை தொடர்களான லட்சுமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல, கோபுரங்கள் சாய்வதில்லை என்ற தொடர்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

தற்போது அவர்களின் திருமணம் பற்றிய செய்திகள் சினி துறையில் பேசப்பட்டு வருகிறது……இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்பட காட்சிகள் வைரலாகி உள்ளது…அதனை இங்கே காணலாம்……

pic1

pic2