இந்த பிஞ்சு குழந்தையின் தாய் பாசத்தைப் பாருங்க… காண்போரின் மனதை உருக வைக்கும் காணொளி..!

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம்!

மனிதர்கள் மட்டும் தான் தங்கள் குழந்தைகளிடம் அந்த பாசத்தைக் காட்டுவார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. நம் வீட்டுப் பக்கத்தில் குட்டிப் போட்டிருக்கும் பூனையோ, நாயோ கூட தங்களின் குட்டியின் அருகில் நம்மை விடுவதில்லை. அதுதான் தாய்ப்பாசம்! சகல ஜீவன்களிலும் தங்கள் தாயை நேசிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள்.

எப்போதுமே தாய் பாசத்துக்கு பணம் ஒரு பொருட்டாகவும், தடையாகவும் இருந்ததே கிடையாது. அதனால் தான் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா என பாடல் வைத்தார். அந்த அளவுக்கு தாய் பாசம் உயர்ந்தது. அதை அப்படியே கண் முன்பு கொண்டுவந்து நிறுத்துவது போல் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஒரு தாய், தன் மூன்றே வயதான குழந்தையையும் அழைத்துக்கொண்டு ஷாப்பிங் மாலுக்குச் சென்றார். அப்போது அந்தக் குழந்தை தாயின் கையை விட்டுவிட்டு வேகமாக ஓடியது. குழந்தை எஸ்குலேட்டர் பகுதியை நோக்கி ஓடியதும், குழந்தையின் தாய் தான் கீழே விழுந்துவிட்டதைப் போல் படுத்துகிடந்து நடித்தார்.

சிறிதுதூரம் போய்விட்டுத் திரும்பிப் பார்த்த குழந்தை தன் தாய் படுத்ததுபோல் கிடப்பதைப் பார்த்துவிட்டு ஓடியே அம்மாவின் அருகில் வந்தது. ஒரு நிமிடம் பொறுமையாக அம்மாவை எழுப்பி பார்த்துவிட்டு ஒரு முத்தமும் கொடுத்ததே பார்க்கலாம். தாய்ப்பாசத்துக்கு முன்பு போட்டி என்ன? வேகமான ஓட்டம் என்ன? இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.