இப்படி ஒரு ஆகாய விமானத்தை நீங்க பார்த்திருக்கவே மாட்டிங்க…… ரூம் போட்டு யோசிப்பாங்களோ… என்ன தான் இருந்தாலும் பாராட்டியே ஆகணும்பா…!

பறவையை கண்டான்…..விமானம் படைத்தான்…..என்று பாடலை எழுதினார் கவிஞர் கண்ணதாசன்……..ஆம் நாம் காணும் பொருட்களிலோ அல்லது நிகழும் நிகழ்வுகளிலோ சிலரது வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்…..அந்த மாற்றங்கள் ஆரோக்கியமானதாகவும், உலகிற்கே பயன்படும் நோக்கில் அமைந்திருக்கும்……ஒரு ஆப்பிள் கீழே விழுந்த நிகழ்வை கண்டுபிடிப்பாக மாற்றினார் சர் ஐசக் நியூட்டன் . அதனால் தான் இன்றும் நம் அறிவியல் புத்தகங்களில் நியூட்டன் மற்றும் அவரது விதிகளையும் படித்து வருகிறோம்…..அதற்கு காரணம் அவருடைய சிந்தனை மாற்றம்.

இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் முன்னால் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் காலம் அவர்கள் மாணவர்களை கனவு காணுங்கள்…..அந்த கனவிற்காக உங்கள் நேரத்தை செலவு செய்யுங்கள் என்று மாணவர்களுக்கு வாழ்வில் முன்னேறுவதற்கான படிநிலைகளை உணர்த்தியிருப்பார். ஒரு கற்பனையை செயலில் உருவாக்குவது அறிவியல். கிடைக்கும் வாய்ப்புகளை புதிய சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பதன் மூலம் அறிவியல் மூலம் பல அற்புதங்கள் நிகழ்கிறது.

விமானத்தை உருவாக்கியவர்கள் ரைட் சகோதரர்கள். அவர்கள் கண்டுபிடித்த விமானம் மூலம் மனிதர்களை பறவையை போல் உலகத்தையே சுற்றி வர வைத்தது. விமானத்தை இயக்க எரிபொருட்கள் அவசியம். தேவையான எரிபொருள் நிரப்ப பட்ட பிறகே அடைய வேண்டிய இடத்திற்கு சரியாக செல்ல முடியும். இங்கு இரண்டு இளைஞர்கள் எரிபொருள் இல்லாமல் மதிவண்டி கொண்டு விமானத்தை இயக்க முயற்சி எடுத்துள்ளனர்.அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதனை இங்கே காணலாம்……