கோரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள இந்த சீன தம்பதி செஞ்ச செயலை பாருங்க..!

கொரானாவால் உலகமே ஸ்தம்பித்தது, யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து மனிதர்களுக்கு கொரான பரவுவதை தடுக்க பல வித யுக்திகள் கையாண்டது. தடுப்பூசி கண்டுபிடித்த பிறகே மனிதர்களுக்கு அச்சம் நீங்கி சாதாரண நிலைக்கு திரும்பினார்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரானாவின் தாக்கதால் உலகம் முழுவதும் மனிதர்கள் பாதிக்கப்பட்டனர். ஒவ்வொரு நாடுகளும் சில விதி முறைகளை உருவாக்கி கொரான பரவுவதை தடுக்க கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டது.

கொரானாவின் தாக்குதல் குறைந்து சாதாரண நிலைக்கு மக்கள் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சீனாவில் கொரானாவின் அடுத்த அலை அதிகமாக பரவி வருவதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றனர். யாரும் அச்ச பட தேவையில்லை ஆனால் தற்காப்பு விதிமுறைகளை கையாண்டால் மக்கள் இன்னலில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்திருக்கிறது.

சீனாவில் கொரானாவின் தாக்கம் தற்போது அதிகமாக இருப்பதால் மக்கள் நோயிலிருந்து தங்களை காத்து கொள்ள சமூக இடைவெளி போன்ற முக்கிய காரணிகளை கடைபிடித்து வருகின்றனர். கை கழுவுதல் ,மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கூட்டங்களில் இருந்து விலகி இருத்தல், சத்தான உணவுகளை எடுத்து கொள்ளுதல், தடுப்பூசி செலுத்துதல் என பல தடுப்பு திட்டங்களை கையாண்டு வருகிறார்கள்.

இங்கு ஒரு சீன தம்பதி கொரானாவில் இருந்து தங்களை காத்து கொள்ள நெகிழி பையால் குடை போன்ற அமைப்பை உருவாக்கி அதை மக்கள் அதிகமாக கூடும் இடங்களான சந்தை, சாலைகள் போன்று மக்கள் அதிகம் புழங்கும் பகுதிகளில் பயன்படுத்திவருகிறார்கள். தம்பதி இருவர் நெகிழிப்பையால் மூடி கொண்டு……. நகரும் வீடு போன்ற குடையை பிடித்த படி தங்களுக்கு தேவையான பொருட்களை நெகிழியில் உள்ள திறப்பின் மூலம் திறந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். சந்தைக்கு வந்த மற்ற மனிதர்களும் அவர்களின் வித்தியாசமான கண்டுபிடிப்பை……. வியப்பில் வேடிக்கை பார்த்து செல்கின்றனர். அந்த காணொலியை இங்கே காணலாம்…..