விபத்தில் அடிபட்டு நடக்க கஷ்டப்பட்ட அப்பாவுக்கு இந்தக் குட்டிக் குழந்தை செய்ததை பாருங்க… நிச்சயம் உருகி போயிடுவீங்க..!

   குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது. இந்த உலகில் நாம் எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத காட்சிகளில் ஒன்றுதான் குழந்தைகளின் செய்கைகள் ஒவ்வொன்றும்  நம்மையும் அறியாமல் வெகுவாக ரசிக்க வைத்துவிடும். 

           ‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது. 

   இங்கேயும் ஒரு குட்டிதேவதை செய்த செயல் இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது. அப்படி, அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.இப்போதுதான் தட்டுத்தடுமாறி நடக்கத் தொடங்கியிருக்கும் குட்டிக் குழந்தை அது. அந்தக் குழந்தைக்கு தந்தை மாற்றுத்திறனாளி. ஊன்றுகோல் துணையுடன் தான் அவர் நடந்து வருகிறார். தன் தந்தை நடந்துவருவதைப் பார்த்த அந்தக் குட்டிக் குழந்தை, அதற்கே முழுதாக ஒரு வயதுதான் ஆகியிருக்கிறது. ஆனாலும் அந்தக் குழந்தை வேகமாகப் போய், தன் அப்பா உட்கார சேரை எடுத்துப் போடுகிறது. கூடவே அப்பா கையில் இருக்கும் ஊன்றுகோலையும் வாங்கி ஒதுக்கி வைக்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.. உங்களையே அறியாமல் உங்கள் கண்கள் குளமாகிவிடும். இதோ அந்தக் காட்சி உங்களுக்காக..