இந்த குட்டிப்பையன் யாருன்னு தெரியுதா…? இப்போ தமிழில் மிக பெரிய நடிகர்..!

   இணையத்தில் ஒரு குட்டிப்பையனின் புகைப்படம் செம தீயாகப் பரவிவருகிறது. இப்போது அந்தப் பொடியன் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார். அவர் யாரென்று தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

       தமிழ்த்திரையுலகில் சர்ச்சையிலேயே சிக்காதவர் எனப் பெயர் எடுத்தவர் நடிகர் சிவகுமார். ஆனால் வாலிப வயதிலேயே அப்படி எதிலும் சிக்காதவர் வயதான பின்னர் செல்பியை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

   இவரது மகன்கள் சூர்யாவும், கார்த்தியும் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். இதில் சூர்யா, நடிப்போடு மட்டுமல்லாது அகரம் பவுண்டேசன் அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கல்விபயிலும் மாணவ, மாணவிகளுக்கும், விவசாயிகளுக்கும் செய்து வருகின்றார்.  இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, சூரரைப் போற்று படமும், இருளர் வாழ்வை மையப்படுத்திய ஜெய் பீம் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகி சூர்யாவுக்கு மிகவும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.

வெளிநாட்டில் படித்துவிட்டு சென்னை வந்த கார்த்தி, பக்கா கிராமத்து ஆசாமியாக பருத்துவீரனில் பட்டையைக் கிளப்பினார்.இயக்குநராக ஆசைப்பட்டு மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் கார்த்தி. ஆனால் பருத்திவீரனின் வெற்றி அவரை சினிமாவின் நாயகனாக்கியது.இடையில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்த கார்த்தி, இப்போது தீரன் அதிகாரம் ஒன்ற், கடைக்குட்டி சிங்கம், கைதி என ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளார். தொடர்ந்து  ஜோதிகாவோடு சேர்ந்து நடித்த தம்பி படமும் போட்ட பணத்தை எடுத்தது. அதன்பின் வந்த சுல்தானும் வெற்றிப்பட வரிசையில் சேர்ந்தது.

 பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய படங்களில் நடித்து கலக்கினார். அந்த குட்டிக் குழந்தை வேறு யாரும் இல்லை. நம் பருத்தி வீரன் கார்த்திதான் அது!