எப்படியெல்லாம் கண்டுபிடிக்குறாங்க பாருங்க… நீவீன காலத்திற்கேற்ப மாவு அரைக்கும் மாடர்ன் ஆட்டுக்கல் குளவி…!

இனிப்பு, பலகாரங்கள், கார உணவு…..இட்லி, வடை, தோசை, ஊத்தப்பம்,ஆப்பம், இடியாப்பம், குழிப்பணியாரம் போன்றவை இந்த காலத்தில் அனைவரது வீடுகளிலும் சர்வ சாதாரணமாக செய்யப்படும் உணவு வகைகள். அதற்கு முக்கிய காரணம் அறிவியல் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளான மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின் சாதனங்கள்.

20,30 ஆண்டுகளுக்கு முன் அதாவது 70,80,90 களில் அறிவியல் முன்னேற்றங்கள் அவ்வளவு எளிதாக கிடைக்க பெறாத காலங்களில் இந்த வகை உணவு பொருட்கள் திருவிழாக்களின் போதும், பண்டிகைகளின் போதும், விருந்தினர்கள் வருகை தரும் போதும் இந்த வகை உணவுகள் குடும்பங்களில் அனைவரும் ஒன்றிணைந்து தயார் செய்வார்கள். அப்போதெல்லாம் மின்சாரம் இல்லாத காரணத்தினாலும், நவீன கருவிகள் அதிகம் பெறப்படாத காலங்களில் மக்கள் வாழ்ந்ததாலும் பெரிதாக அவர்கள் அதிகம் இந்த வகை உணவு பொருட்களுக்கு முக்கியத்துவம் தந்ததில்லை.

இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம் போன்ற உணவுகள் சிறப்பு உணவுகளாக கருதப்பட்டன. மேலும் அந்த உணவுகளை தயாரிப்பதற்கு பெண்கள் ஆட்டுக்கல், குளவி,அம்மி போன்றவற்றில் உட்கார்ந்து கையால் அரைக்க வேண்டும். ஒருவர் மாற்றி இன்னொருவர் அந்த பணியை மேற்கொள்வார்கள்.

உளுந்து, அரிசியால் செய்யப்படும் இந்த உணவுகள் முதல் நாள் பெண்கள் கைகளால் ஆட்டுகல்லில் ஆட்டி மாவாக எடுத்துக்கொள்வார்கள். அந்த மாவினை அடுத்த நாள் இட்டிலியாகவோ, தோசையாகவோ பயன்படுத்துவர். இவ்வாறு அந்த உணவுகள் தயார் செய்ய அவர்கள் அதிக நேரம் மெனக்கெட வேண்டும், மேலும் இது தவிர பெண்களுக்கு வீடுகளில் மட்டும் இன்றி விவசாய பணிகள் செய்ய வேண்டி இருக்கும். இதனால் இந்த வகை உணவுகள் பண்டிகை நாட்களில் தயார் செய்வார்கள்.

அன்றைய காலங்களில் பெரும்பாலும் பழைய கஞ்சி, உளுந்து களி, கேழ்வரகு களி, குதிரை வாலி அரிசி சாதம், போன்ற பாரம்பரிய மிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவினை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். பெண்கள் வீட்டு வேலை செய்வதற்கு அதிக உழைக்க வேண்டியிருக்கும், கைகளால் அம்மியில் அரைத்து குழம்பு வைப்பார்கள். இவ்வாறு கைகளால் தயாரிக்கப்படும் உணவிற்கு ருசி அதிகம்.

சமைத்த உணவுகளை பாதுகாக்கும் பெட்டகங்கள் இல்லாததால் அன்றைக்கு தயார் செய்யப்படும் உணவினை சரியான அளவில் தயாரித்து உண்பார்கள். இதனால் இயற்கையுடன் இணைந்த வாழ்வினை வாழ்ந்து நோய்கள் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அதற்கு காரணமான பொருள் ஆட்டுக்கல் குளவியும் ஓன்று. தற்போது உள்ள இளைய தலைமுறையினர் ஆச்சர்யம் கொள்ளும் வகையில் இந்த நீவீன காலத்திற்கேற்ப ஆட்டுக்கல்லை எந்திரத்துடன் இணைத்து பயன்படுத்தும் புதிய யுக்த்தியை தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபித்துள்ளார். பழமை மாறாமல் இன்றும் தொன்று தொட்டு வரும் பழமை மாறாத கண்டுபிடிப்பை இணையவாசிகள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். அந்த கருவியின் செயலாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது…….

You may have missed