மே-1 ஆம் தேதி இவ்வளவு ஸ்பெஷலா..!! வெளியான அப்டேடால் சந்தோசத்தில் ரசிகர்கள்…

தமிழ் திரையுலகில் இதுவரை ஒரு பெரிய நடிகரின் படம் இறங்க இருந்தால் அந்த தேதியில் மற்ற முக்கிய பிரபலத்தின் படங்களை வெளிவிட மாட்டார்கள்.ஏனென்றால் ஏதாவது ஒரு படம் ரசிகர்களிடையே மாறுபட்ட கருத்தை பெற்றால் அது வசூலை பாதிக்கும் என்பதால் தான்.ஆனால் கடையாக முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் அவர்களின் படங்கள் ஒரே நாளான பொங்கலன்று வெளியிட்டார்கள் அதில் வசூல் ரீதியாக துணிவை விட வாரிசு தோல்வியை அடைந்தது.

தற்போது வரும் பொங்கல் பண்டிகைக்கும் பல படங்கள் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதில் அஜித் அவர்கள் நடித்த விடா முயற்சி படமும் ஒன்று. இதைத்தொடர்ந்து இவரின் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக்கி கொண்டிருக்கும் படமான குட் பேட் அக்லி மே-1 ஆம் தேதி வெளிவர போவதாக அறிவித்திருந்தார். இதன்கூடவே ஏஆர் முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் SK அவர்களின் நடிப்பில் SK 23 வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியிட்டிருந்தார்கள்.

இரு முன்னணி நடிகர்கர்களின் படங்கள் ஒரே நாளில் வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சியுடன் மிகவும் ஆவலாக மே-1ஆம் தேதியை எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் கூலி படமும் மே-1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பேரதிர்ச்சியயை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்படாத நிலையில் ரசிகர்கள் அப்படி என்னதான் இருக்கு அந்த மே-1 அன்று என கமெண்ட் செய்து வருகின்றனர்.

You may have missed