அமரன் பட ஸ்டைலில் ஆர்த்திக்கு ப்ரொபோஸ் செய்த SK… ஆர்த்தியின் பிறந்தநாளில் வெளிவந்த வீடியோ…

தீபாவளி அன்று வெளியே வந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது SK நடிப்பில் வெளியான அமரன் படம். இப்படம் சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை பிடித்துள்ளது.இப்படம் சிவகார்த்திகேயனின் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம் எனலாம்.

இதுவரை தமிழ் சினிமாவில் மொத்தமாக 3 நடிகர்களின் படங்கள் தான் 250 கோடி மேல் வசூல் செய்துள்ளது அந்தவகையில் தற்போது இந்த லிஸ்டில் சிவகார்த்திகேயனும் நான்காவது இடத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் அமரன் பட ஷூட்டிங்கில் இருந்தபடியை சிவகார்த்திகேயன் அவர்கள் வீட்டிற்கு சென்று ஆர்த்திக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

அமரன் படத்திலும் இதே காட்சி ஒன்று வரும் அதேபோலவே வீட்டிற்கு SK சென்று ஆர்த்திக்கு சர்ப்ரைஸ் கொடுத்து சந்தோசப்படுத்தியுள்ளார்.தற்போது ஆர்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த விஷையவை SK வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் காதல் ஜோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

You may have missed