உங்க கல்லீரலை பாதுகாக்க இதை மட்டும் செய்ங்க போதும்… அன்றாட பழக்கத்தில் இதில் கொஞ்சம் கண் வைங்க…!

நம் உடலின் பல்வேறு இயக்கச் செயல்பாடுகளுக்கும் கல்லீரல் தான் அடிப்படை. ஹீமோகுளோபின் அமைப்பில் அங்கம் வகிக்கும் இரும்பு, பிற தனிமங்கள், காயங்களை குணப்படுவதில், கொலஸ்டிராலை கட்டுக்குள் வைப்பதில் என கல்லீரல் அளவற்ற பணிகளை செய்கிறது. பித்த நீர் சுரப்புக்கும் கல்லீரல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆனால் நம் அன்றாட சில பழக்கவழக்கங்களினாலேயே நம் கல்லீரலை நாம் கெடுத்துக் கொள்கிறோம். இதனால் கல்லீரல் செயல் இழப்பு கூட ஏற்படும் அபாயம் உண்டு. இதனைத் தவிர்க்க சில விசயங்களை கடைப்பிடித்தாலே போதும். அதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.

நம்மில் பலரும் இன்று வியாபாரம், தொழில், குடும்பச்சூழல் என ஏதேனும் ஒரு காரணத்துக்குள் சிக்கிக்கொண்டு சரியாக தூங்குவது இல்லை. ஆனால் தூக்கம் இல்லாமல் இருப்பதும் கூட கல்லீரலில் ஆக்ஸிடேடிவ் அழுத்தம் ஏற்பட காரணம் ஆகிறது. சிலர் அதிக அளவில் மருந்துகள், மூலிகைகள், கூடுதல் எனர்ஜிக்கான சத்துப் பொடிகள் எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் இதனால் கூட கல்லீரல் பாதிக்கப்படும். அதிக மாத்திரைகள், மருந்துகள் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பதே கல்லீரல் பாதுகாப்பின் முதல் படி!

உடல் பருமன், நீண்ட காலத்துக்கு போதிய ஊட்டச்சத்தை உணவில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது ஆகியவையும் கல்லீரலையே பாதிக்கும். ஆல்ககால் தான் என்றில்லை, உடலுக்கு கேடு விளைவிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளும் கூட கல்லீரல் பாதிப்புக்கு காரணம் ஆகிறது. இதனைத் தவிர்க்க அதிக அளவில் பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின் சி மற்றும் ஈ, ஜின்க், செலினியம் ஆகியவை கிடைக்கும்.

கல்லீரல் நச்சை போக்குவதில் வைட்டமின் பி முக்கியப்பங்கு வகிக்கிறது. நட்ஸ், முட்டை, மீன், கோழி, பருப்பு, பழங்களில் இது அதிகமுள்ளது. நம் உடலில் கெட்ட கொலஸ்டிரால் மிகாமல் பார்த்துக் கொள்வது இதயத்துக்கு மட்டுமல்ல…கல்லீரலுக்கும் நல்லது. இதற்கு தினசரி 40 நிமிட நடைபயிற்சி கைகொடுக்கும். காலை உணவை தவிர்ப்பது கல்லீரல் பாதிப்புக்கு வழி வகுத்து விடும். இதனால் உடல் எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் இப்படியான முயற்சியில் இறங்கவே கூடாது.

ஆல்கஹாலும், புகையும் கல்லீரலின் பகைவன். அதையும் விட்டுவிடுங்கள். அப்புறம் உங்கள் கல்லீரல்…உங்கள் உடலின் பலமாகி விடும்!

You may have missed