தற்கால கட்டிட கலைக்கு சான்றாகும்… கட்டிட தொழிலாளர்களின் கடின உழைப்பு…. இப்படி ஒரு வேகத்தை பாத்திருக்கவே மாட்டீர்கள்….!

உலகம் தோன்றிய நாள் முதல் மனிதர்கள் நாகரிகம் மேம்பட அவர்களின் விருப்பத்திற்கேற்ப தங்களுக்கு பிடித்தமான வடிவங்களில் கட்டிடங்களையும், வீடுகளையும், அரண்மனைகளையும் உருவாக்கினார்கள். நூற்றாண்டு காலமாக சிறந்து கம்பீரத்தோடு நிற்கும் கட்டிடங்கள் இன்றும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. இந்திய வரலாற்றில் சிறந்து விளங்கும் கட்டிக்கலைக்கு சான்றாக விளங்கும் முதல் 5 பிரபலமான இடங்களை பற்றி பார்ப்போம். முதலில் நாம் பார்க்க இருப்பது தாஜ்மஹால். தாஜ்மஹால் என்றவுடன் ஷாஜகான், மும்தாஜ் அவர்களின் அன்பை பிரதிபலித்து கொண்டு இன்னும் உலகத்திற்கு கம்பீரத்தோடு இந்தியாவின் புகழை பறைசாற்றுகிறது. உலகெங்கும் இருந்து வருடத்திற்கு 10 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

இரண்டாவதாக பஞ்சாப் மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் வரலாற்று சிறப்பு மிக்க பொற்கோவில்…….இது அமிர்தசரஸில் அமைந்துள்ளது. இது சீக்கியர்களின் புனித தலமான குருத்துவரா என்றும் அழைக்கப்படுகிறது. கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் கோவில் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டு ஜொலிக்கிறது.

மூன்றாவதாக நம் தமிழ் திருநாட்டின் பெருமைகளையும், கலாச்சாரத்தையும் உலகெங்கும் பறைசாற்றும் ஆன்மீக பூமியான மதுரையின் அடையாளமான மீனாட்சி அம்மனின் கோவில். மதுரை என்றால் மீனாட்சி அம்மன் கோவில் ஞாபகம் வரும். மீனாட்சி சுந்தரரேஸ்வரரின் திருவிளையாடல்களுக்கு புகழ் பெற்ற ஸ்தலமாக விளங்குவதோடு 33,000 சிற்பங்கள் சிற்ப கலைகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

நான்காவதாக இருப்பது கர்நாடகாவின் மைசூர் அரண்மனை. அரண்மணிகளின் ராணியாக வருணிக்கப்படும் மைசூர் அரண்மனையின் பெரிய அரங்குகள், அழகிய கலை ஓவியங்களுடன் சிறந்து விளங்குவதோடு இந்தோ-சாரசெனிக் கட்டிடக்கலையை எடுத்து இயம்புகிறது. மேலும் இரவு நேரத்தில் பார்வையிட சிறந்த நேரமாகும். வண்ண விளக்குகளுடன் ஒளிர்வதால் காண்பதற்கு ஒளிரும் அரண்மனை போன்று இருக்கும்.

ஐந்தாவதாக…. தி கேட் வே ஆப் இந்தியா என்று அழைக்கப்படும் மும்பை மாநகரத்தின் தாஜ்மஹால் என்றும் கருதப்படுகிறது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் அவரது மனைவி ராணி மேரி வருகை புரிந்ததின் நினைவாக எழுப்பபட்ட நினைவுச்சின்னம் ஆகும். இப்படி நினைவு சின்னமாக விளங்கும் பல கட்டிடங்கள் கம்பீரத்தோடு இன்றும் வரலாற்றை எடுத்து கூறும் கட்டிடங்களாக நிற்பதற்கு தொழிலாளிகளின் கடின உழைப்பு மற்றும் அவர்களின் சுறுசுறுப்பும் ஆகும். இந்த காணொலியில் நம் கட்டிட கலை தொழிலாளர்களின் வேகமும் அவர்களின் புத்தி கூர்மையையும் வெளிப்படுத்தும் காணொலியை காணலாம்…